சாம்சங் கேலக்ஸி S8: இதுவரை இல்லாத மிகச்சிறந்த டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி S8: இதுவரை இல்லாத மிகச்சிறந்த டிஸ்ப்ளே

By Siva
|

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் S8 மற்றும் S8+ என இரண்டு புதிய மாடல்களை வெளியிட்டது. இந்த போனின் சிறப்பு அம்சமே இதன் அதிநுட்ப டெக்னாலஜியில் அமைந்த டிஸ்ப்ளேதான்.

சாம்சங் கேலக்ஸி S8: இதுவரை இல்லாத மிகச்சிறந்த டிஸ்ப்ளே

இந்த டிஸ்ப்ளே குறித்து டிஸ்ப்ளேக்களை டெஸ்ட் செய்து தரம் பிரிக்கும் டிஸ்ப்ளேமெட் என்றா நிறுவனம், இதுவரை வெளிவந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களில் இந்த S8 மற்றும் S8+ மாடல்களில் உள்ள 'இன்பினிட்டி டிஸ்ப்ளே'தான் மிகச்சிறந்தது என்று சான்றிதழ் கொடுத்துள்ளது.

மேலும் அதிகபட்ச தரக்குறியீடான A+ தர வகையை இந்த போனின் டிஸ்ப்ளேக்கு டிஸ்ப்ளேமேட் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சாம்சங் S8 மற்றும் S8+ மாடல் ஸ்மார்ட்போனை வாங்கியவர்களுக்கும், இனிமேல் வாங்க போகும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளே சைஸ் என்ன?

டிஸ்ப்ளே சைஸ் என்ன?

சாம்சங் நிறுவனத்தின் S8 மாடலில் 5.8 இன்ச் அளவில் டிஸ்ப்ளே உள்ளது. அதுமட்டுமின்றி QHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே தரத்தை கொண்ட இந்த போன் 1440x2960 பிக்சலை கொண்டது.

அதே நேரத்டில் சாம்சங் S8+ மாடலை பார்த்தால் இந்த மாடலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளேவுடன் QHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் 1440x2960 பிக்சலுடன் உள்ளது. மேலும் இரண்டு டிஸ்ப்ளேக்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4K சப்போர்ட் செய்யும் மாடல்:

4K சப்போர்ட் செய்யும் மாடல்:

சாம்சங் நிறுவனத்தின் S8 மற்றும் S8+ மாடல் ஸ்மார்ட்போன்கள் அதிக தரம் வாய்ந்த 4K வீடியோவை பிளே செய்யும் அளவுக்கு தரம் வாய்ந்தது. மேலும் UHD அலையன்ஸ் வழங்கிய மொபைல் HDR பிரிமியம் சான்றிதழ் பெற்ற முதல் ஸ்மார்ட்போன் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்டாலும் ஜியோ இலவசங்களை பெறலாம், அதெப்படி.?தடை செய்யப்பட்டாலும் ஜியோ இலவசங்களை பெறலாம், அதெப்படி.?

டிஸ்ப்ளேவின் விகிதம் எப்படி இருக்கும்?

டிஸ்ப்ளேவின் விகிதம் எப்படி இருக்கும்?

இந்த புதிய சாம்சங்அ S8 மற்றும் S8+ மாடல்களின் டிஸ்ப்ளேவின் விகிதம் குறித்து டிஸ்ப்ளேமேட் கூறும்போது, இந்த போனின் உயரம் மற்றும் அகலம் 18.5: 9 = 2.05, என்பதாக உள்ளது. இந்த அளவு இதற்கு முந்தைய மாடலன கேலக்ஸி S7 மாடலைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி S7 மாடலில் 16 : 9 = 1.78 என்ற விகிதம் தான் இருந்தது.

எனவே இந்த ஸ்மார்ட்போனில் போட்ரியாட் மோட்-ல் இருக்கும்போது அதிக உயரமாகவும் லேண்ட்ஸ்கேப் மோட்-இல் இருக்கும்போது அதிக அகலமாகவும் இருக்கும்.

கண்களை கூசவைக்கும் பிரகாசம்:

கண்களை கூசவைக்கும் பிரகாசம்:

மேலும் டிஸ்ப்ளேமேட் இந்த S8 மற்றும் S8+ மாடல்களின் பிரைட்னெஸ் அதாவது பிரகாசம் குறித்து கூறும்போது மிக அதிகமான பிரகாசத்தை கொண்ட போன் இதுதான் என்று உறுதியாக அடித்து கூறுகிறது. அதாவது 1020 நிட்ஸ் அளவில் இதன் பிரகாசம் உள்ளது. மேலும் இந்த மாடல் பெரும்பாலும் HDR தரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இயற்கையான நிறங்களை போட்டோ அல்லது வீடியோ எடுக்கும்போது எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது என்பது இதன் சிறப்பு ஆகும். மேலும் இந்த மாடலில் நைட்மோட் இருப்பதால் புளுரே பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாத்து கொள்ளும் வசதியும் உண்டு.

எனவே நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும்போது டிஸ்ப்ளேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நபராக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு இந்த மாடலை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung has introduced 'Infinity Display' in it's recently launched Galaxy S8 and Galaxy S8+ smartphones. Now it is known as the best phone display ever.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X