நவராத்திரி சலுகையின்கீழ் அதிரடி விலைகுறைப்பு : கேலக்ஸி எஸ்8 & எஸ்8 ப்ளஸ்.!

|

நவராத்திரி விழாவை முன்னிட்டு இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையின் கீழ், கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் ஆகிய இரண்டு கருவிகளுமே ரூ.4,000/- என்ற விலைக்குறைப்பை பெற்று தற்போது முறையே ரூ.53,990/- மற்றும் ரூ.60,990/- என்ற விலைக்கு வாங்க கிடைக்கிறது.

அதிரடி விலைகுறைப்பு : கேலக்ஸி எஸ்8 & எஸ்8 ப்ளஸ்.!

கூடுதலாக, எச்டிஎஃப்சி. வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.4,000/- கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த புதுப்பிக்கப்பட்ட விலை நிர்ணயம் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் காட்டப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் சாதனத்தின் 6 ஜிபி ரேம் + 128ஜிபி மாறுபாடு ரூ.1,000/- என்ற விலைகுறைப்பை பெற்று ரூ.64.900/-க்கு வாங்க கிடைக்கிறது. உடன் கூடுதலாக, எச்டிஎஃப்சி. வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.4,000/- கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் சாதனத்தின் 6 ஜிபி ரேம் மாறுபாடானது இரண்டு வெவ்வேறு விலை குறைப்புகளைப் பெற்றுள்ளது.

அதிரடி விலைகுறைப்பு : கேலக்ஸி எஸ்8 & எஸ்8 ப்ளஸ்.!

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் ஆகிய அக்கருவிகளுக்கு நிகழ்த்தப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க விலை குறைப்பு இதுவாகும். கடந்த வாரம் வெளியான சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஆனது இந்தியாவில் முன்பதிவிற்கு திறந்து விடப்பட்டுள்ளது மற்றும் வருகிற செப்டம்பர் 21 முதல் இக்கருவிகளின் ஷிப்பிங் தொடங்குகிறது.

ரூ.67,900/- என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகியுள்ள (64ஜிபி மாறுபாடு) சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆனது மேப்பிள் கோல்ட் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய வண்ண மாறுபாடுகளில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8, Galaxy S8+ Price in India Cut in ‘Navratra Special Offer. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X