சூடுபிடிக்கும் ஆட்டம் : நோக்கியா, ஆப்பிளுக்கு சாம்சங் சரியான பதிலடி.!

Written By:

2017-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஆகிய இரண்டு கருவிகளும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.

சூடுபிடிக்கும் ஆட்டம் : நோக்கியா, ஆப்பிளுக்கு சாம்சங் சரியான பதிலடி.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்8+ ஆகிய இரண்டு கருவிகளும் வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் அதன் சந்தை விற்பனையை தொடங்கும்.

மிட்நைட் பிளாக், ஆர்க்கிட் கிரே, ஆர்க்டிக் சில்வர், கோரல் ப்ளூ மற்றும் மேப்பிள் கோல்ட் ஆகிய வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் இக்கருவியின் சிறப்பம்சங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அம்சங்கள் என்னென்ன.?? விலை நிர்ணயம் என்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிக்ஸ்பை

பிக்ஸ்பை

முற்றிலும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் புதிய அம்சங்கள் என்று பார்க்கும் போது "ஒரு புதிய சகாப்தம் துவங்கியுள்ளது" என்றே கூறலாம். கேலக்ஸி எஸ்8 அக்கருவியில் நிறுவனத்தின் சொந்த பிக்ஸ்பை (Bixby) குரல் சார்ந்த விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் இணைக்கப்பட்டுள்ளது.

விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்

விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்

மேலும் எதிர்பார்த்தபடியே சாம்சங் நிறுவனத்தின் பிக்ஸ்பை ஆனது ஆப்பிளின் சிரி, கூகுள் அசிஸ்டெண்ட், மைக்ரோசாப்ட்டின் கோர்டானா மற்றும் அமேசானின் அலெக்சா உட்பட செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் மற்ற குரல்-சார்ந்த விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

கருவிழிப்பட ஸ்கேன்

கருவிழிப்பட ஸ்கேன்

மேலும் கருவிழிப்படலத்தின் (iris) ஸ்கேன் பயோமெட்ரிக் அங்கீகாரமானது தொலைபேசியை அன்லாக்ஸ் செய்ய மற்றும் சாம்சங் அக்கவுண்ட்டை சரிபார்க்க உதவும். பேசியல் ரீகக்கனைசேஷன் தேரையும் பயனர்கள் நிகழ்த்திக்கொள்ளலாம். கூடுதலாக, இரு சாதனங்காலின் பின்புறத்திலும் கைரேகை ஸ்கேனர் அமைந்துள்ளன.

ஒரு கணினி போன்று

ஒரு கணினி போன்று

மேலும் சாம்சங் இறுதியாக அதன் பயனர்களுக்கு மைக்ரோசாப்ட் கோன்டினியம் அம்சத்தை போலவே அதன் சாம்சங் டெக்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உங்கள் ஸ்மார்ட்போனை கீபேட், மவுஸ் என ஒரு கணினி போன்று பயன்படுத்த அனுமதிக்கும்

ஐபி68 சான்றிதழ்

ஐபி68 சான்றிதழ்

தூசு மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி68 சான்றிதழ் உடன் வெளிவரும் இந்த இரண்டு கருவிகளும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் பயனர் இடைமுகம் கொண்டு இயங்கும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மேலும் குறிப்புகள் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஒரு 5.8 அங்குல க்யூஎச்டி + (1440x2960 ​​பிக்சல்கள்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது மறுபக்கம் கேலக்ஸி எஸ்8+ ஆனது ஒரு 6.2 அங்குல க்யூஎச்டி + (1440x2960 ​​பிக்சல்கள்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

இரண்டு கருவிகளும் 12-மெகாபிக்சல் எப் /1.7 துளை கொண்ட 'இரட்டை பிக்சல்' பின்புற கேமரா, அதே போன்று எப் / 1.7 துளை கொண்ட மற்றும் ஆட்டோ போகஸ் கொண்ட 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 + ஆகிய இரண்டுமே க்வல்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி (2.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் + 1.7ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்) மூலம் இயக்கப்படுகிறது.

ரேம்

ரேம்

தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெளியிடப்பட இருக்கும் சேமிப்பு மாதிரிகளை பொறுத்தமட்டில் (இந்தியா உட்பட) இரண்டுமே 4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை மைக்ரோ அட்டை வழியாக விரிவாக்கக் கூடிய ஆதரவு கொண்ட 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்டு வருகிறது.

இணைப்பு ஆதரவுகள் :

இணைப்பு ஆதரவுகள் :

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி (2.4ஜிகாஹெர்ட்ஸ், 5ஜிகாஹெர்ட்ஸ்), ப்ளூடூத் வி5.0, யூஎஸ்பி டைப்-சி, என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆகிய ஆதரவுகளை இரண்டு கருவிகளுமே கொண்டுள்ளது.

பேட்டரி திறன்

பேட்டரி திறன்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 + ஆகிய இரண்டுமே வயர்லெஸ் சார்ஜ் மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆகியவைகளை ஆதரிக்கும். மற்றும் முறையே 3000எம்ஏஎச் மற்றும் 3500எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டு அளவீட்டில் 148.9x68.1x8மிமீ மற்றும் 155 கிராம் எடை மற்றும் 159.5x73.4x8.1மிமீ மற்றும் 173 கிராம் எடை கொண்டுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

சாம்சங் வெளியீட்டு நிகழ்வில் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 + கருவிகளின் விலையை அறிவிக்க வில்லை என்றபோதிலும் வெரிசோன் வயர்லெஸ் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி S8ப்ளஸ் முறையே சுமார் ரூ.46,700/- மற்றும் சுமார் ரூ.54,500/- விலை நிர்ணயம் பெறலாம். அதிகபட்சமாக முறையே சுமார் ரூ. 48,700/- மற்றும் சுமார் ரூ.55,200/- வரை செல்லலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சாம்சங் கேலக்ஸி புக் அதிகாரபூர்வமான வீடியோ வெளியீடு.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung Galaxy S8, Galaxy S8+ With Bixby Virtual Assistant, Infinity Display Launched: Specifications, Release Date, and More. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot