கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் (இந்திய விற்பனை தேதி, விலை, அம்சங்கள்).!

சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் ஆகிய இரண்டு கருவிகளும் ஏற்கனவே இந்தியாவில் முன்-பதிவிற்கு திறந்து விடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

|

இன்று (வெள்ளிக்கிழமை) சாம்சங் இந்தியா நிறுவனம் அதன் சமீபத்திய கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் கருவிகளை இந்தியாவில் அடுத்த வாரம் புதன்கிழமை தொடங்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள. ஒரு ட்வீட்டில், சாம்சங் இந்தியா "இந்தியா உங்களின் போனை அன்பாக்ஸ் (#UnboxYourPhone) செய்ய தயாராகுங்கள்.! என்றும் ஏப்ரல் 19-ஆம் தேதி இந்திய வெளியீடு இருக்கும் என்றும் அறிவித்துள்ளது

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் ஆகிய இரண்டு கருவிகளும் ஏற்கனவே இந்தியாவில் முன்-பதிவிற்கு திறந்து விடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி

க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி

இந்த அறிமுகத்தில் இருந்து இக்கருவிகள் விலை மீது தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இந்தியாவில் சாம்சங் நிறுவனம் அதன் எக்சிஸிநோஸ் 8895 எஸ்ஓசி வகை கருவிகளையும் மற்றும் அமெரிக்க பிரதேசங்களுக்குத் தேர்ந்தெடுக்கபட்ட க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி வகை கருவிகளையும் வெளியிடுகிறது.

வெரிசோன் வயர்லெஸ்

வெரிசோன் வயர்லெஸ்

ஆக இந்த கருவிகளின் அதிகாரப்பூர்வமான விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் 29-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட பொது வெரிசோன் வயர்லெஸ் கருவிகள் மிகக்குறைந்த விலை நிர்ணயம் பெற்றது.

விலை

விலை

அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்8 சுமார் ரூ.46,700/- மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் சுமார் ரூ.54,500/- என்ற விலை நிர்ணயம் பெற்றன. முறையே இக்கருவிகளின் விலை அதிகபட்சம் சுமார் ரூ.48,700/- மற்றும் சுமார் ரூ.55,200/- வரை செல்லலாம். இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் அமெரிக்க விலையை சுற்றி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்8

சாம்சங் கேலக்ஸி எஸ்8

டிஸ்ப்ளே : 5.80 அங்குலம்
செயலி : 1.9ஜிகாஹெர்ட்ஸ் அக்டா கோர்
முன்பக்க கேமரா : 8-மெகாபிக்சல்
தீர்மானம் : 1440x2960 ​​பிக்சல்கள்
ரேம் : 4ஜிபி
ஓஎஸ் : ஆண்ட்ராய்டு 7.0
சேமிப்பு : 64ஜிபி
பின் கேமரா : 12-மெகாபிக்சல்
பேட்டரி திறன் : 3000எம்ஏஎச்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்

காட்சி : 6.20 அங்குல
செயலி :1.9ஜிகாஹெர்ட்ஸ் அக்டா கோர்
முன்பக்க கேமரா : 8-மெகாபிக்சல்
தீர்மானம் : 1440x2960 ​​பிக்சல்கள்
ரேம் : 4ஜிபி
ஓஎஸ் : ஆண்ட்ராய்டு 7.0
சேமிப்பு : 64ஜிபி
பின் கேமரா : 12-மெகாபிக்சல்
பேட்டரி திறன் : 3500எம்ஏஎச்

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : எச்டிசி ஒன் எக்ஸ்10 (விலை மற்றும் அம்சங்கள்).!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S8, Galaxy S8+ India Launch Set for Wednesday. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X