ரூ.8000 சலுகையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ8 பிளஸ்.!
சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்டபோனின் உண்மை விலை ரூ.45,990-ஆக இருந்தது, தற்சமயம் அறிவிக்கப்பட்ட ரூ.8000 கேஷ்பேக் மூலம் ரூ.37,990-க்கு ஸ்மார்ட்போனை பெற முடியும்.
தற்சமயம் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 சாதனங்களுக்கு அதிரடி சலுகை வழங்கப்பட்டுள்ளது, இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 6 சாதனம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8000 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்புடன் More Than Just Speed என்ற டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள்.

சாம்சங் சலுகை:
சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்டபோனின் உண்மை விலை ரூ.45,990-ஆக இருந்தது, தற்சமயம் அறிவிக்கப்பட்ட ரூ.8000 கேஷ்பேக் மூலம் ரூ.37,990-க்கு ஸ்மார்ட்போனை பெற முடியும். கேலக்ஸி ஏ8 பிளஸ் உண்மை விலை ரூ.34,990-ஆக இருந்தது, தற்சமயம் அறிவிக்கப்பட்ட ரூ.8000 கேஷ்பேக் மூலம் ரூ.29,990-க்கு ஸ்மார்ட்போனை பெற முடியும்.

கேலக்ஸி எஸ்8:
கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440x2960 பிக்சல்
திர்மானம் 18.5:9 திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக எக்ஸிநோஸ் 8895 எஸ்ஒசி செயலி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ
இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி எஸ்8 கேமரா:
கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் பிக்சல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ8 பிளஸ்:
கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், அதன்பின்பு 1080x2220 பிக்சல் திர்மானம் மற்றும் 18.5:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எகஸ்நோஸ் 7885 ஆக்டோ-கோர் எஸ்ஒசி செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ8 பிளஸ்:
கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+8எம்பி டூயல் செல்பீ கேமரா மற்றும் 16எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்ப ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications