எஸ்8 போன்ற வடிவமைப்பு; 4000எம்ஏஎச் பேட்டரி உடன் கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ்.!
இது கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ உடன் ஒப்பிடும்போது மிகவும் பெரியது. கேலக்ஸி எஸ்8 ஒரு 3000எம்ஏஎச் பேட்டரியும், அதே நேரத்தில் எஸ்8+ 3500 எம்ஏஎச் பேட்டரி கொண்டும் ஆதரிக்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்8 ஸ்மார்ட்போனின் ஒரு சாமானிய பதிப்பை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் எஸ்6 மற்றும் எஸ்7 ஆகிய கருவிகளை அறிமுகம் செய்த வேகத்திலேயே கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் மற்றும் எஸ்7 ஆக்டிவ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிவித்தது.
ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பதை நம்மால் உறுதி செய்ய முடிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய லீக்ஸ் சுற்றுகள் பல வண்ணம் இருக்க, இப்போது வரவிருக்கும் எஸ்8 ஆக்டிவ் வடிவமைப்பு மற்றும் சில அம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

4000எம்ஏஎச்
வெளியான தகவலின் கீழ் எஸ்8 ஆக்டிவ் ஆனது கேலக்ஸி எஸ்8 போன்றே வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் சில புதிய லீக்ஸ் படங்கள் காட்சிப்படுத்துகின்றன உடன் இந்த சாதனம் 4000எம்ஏஎச் என்ற பெரிய அளவிலான பேட்டரி கொண்டிருக்கும் என்றும் அறியப்படுகிறது.

கேலக்ஸி எஸ்8 போன்ற
இந்த லீக்ஸ் தகவலை சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள ஒரு சாம்சங் ஊழியரிடமிருந்து நேரடியாக வருகிறது. இது முதலில் ஆண்ட்ராய்டு போலீஸ் மூலம் வெளியிடப்பட்டது. வெளியான படங்கள் கேலக்ஸி எஸ்8 போன்ற வடிவமைப்பை வெளிப்படுத்த, ஆனால் பேட்டரி அமைப்பில் சிறிய வேறுபாடு தெரிகிறது.

பேட்டரி
அதாவது எஸ்8 ஆக்டிவ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி என்பதை சுட்டிக்காட்டும் மாதிரி எண் எஸ்எம்-ஜி892ஏ தோற்றமளிக்கிறது. இது கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ உடன் ஒப்பிடும்போது மிகவும் பெரியது. கேலக்ஸி எஸ்8 ஒரு 3000எம்ஏஎச் பேட்டரியும், அதே நேரத்தில் எஸ்8+ 3500 எம்ஏஎச் பேட்டரி கொண்டும் ஆதரிக்கப்படுகிறது.

வேறுபாடு
வரவிருக்கும் எஸ்8 ஆக்டிவ் நிலையான எஸ்8 போன்றே ஒரு 5.8-அங்குல டிஸ்பிளே கொண்டிருக்குமென்று கூறப்படுகிறது. ஆனால், காட்சிக்கான முனைகளில் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், வளைந்த விளிம்புகள் இல்லாதிருப்பது தான் - மேலும் இது கருவியின் நீடித்த தன்மை காரணத்தால் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

பொத்தான்
மேலும் லீக்ஸ் படங்கள் பார்த்து, எஸ்8 ஆக்டிவ் ஸ்மார்ட்போனை மற்ற ஆக்டிவ் தொலைபேசிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. இருப்பினும் சாம்சங் ஆக்டிவ் கருவிகளில் பொருத்தப்படும் கடினமான ஹோம் மற்றும் நேவிகேஷன் பொத்தான்களை இதிலும் எதிர்பார்க்கலாம்.

ரேம்
இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருவி சார்ந்த சிறிய வேறுபாடுகள் தவிர, வரவிருக்கும் சாம்சங் எஸ்8 ஆக்டிவ் ஆனது அப்படியே எஸ்8 போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 ப்ராஸசர், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு ஆகியவற்றுடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மேலும் விரிவாக்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா
கேமரா துறையை பொறுத்தமட்டில் பின்புறத்தில் ஒரு 12 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்பக்கம் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் காணப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ் சார்ந்து முன்னர் வெளியான லீக்ஸ் ஒன்று பெஸல்கள் இல்லாத டிஸ்பிளே - முடிவிலா காட்சி - கேலக்ஸி எஸ்8-ல் இருப்பது போன்றே ஒரு சென்சார் பொத்தான் ஆகியவைகள் இடம் பெறுமென்று கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications