அமேசான் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்-க்கு விலைக்குறைப்பு.!
4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறன் கொண்டு மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்குகிறது
அமேசான் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் இப்போது ரூ.48,599/-க்கு கிடைக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.56,900/-க்கு இந்த ஸ்மார்ட்போன் தொடங்கப்பட்டது. பின்னர், ப்ளூ கோரல் மற்றும் இளஞ்சிவப்பு கோல்ட் வண்ண வகைகளில் அறிமுகமாகி ரூ.50,990/-க்கு அறிவிக்கப்பட்டன.
மற்ற வண்ண விருப்பங்களான பிளாக் ஓனிக்ஸ், கோல்ட் பிளாட்டினம், சில்வர் டைட்டானியம் மற்றும் இளஞ்சிவப்பு கோல்ட் வகைகளில் தற்போது, கோல்ட் பிளாட்டினம் மட்டுமே தள்ளுபடி விலையில் கிடைக்கிறது, அதே வேளையில் மற்ற வண்ண மாதிரிகள் ரூ.50,900/-க்கு கிடைக்கின்றன.

256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு
இந்த சாதனத்தின் அம்சங்களை நினைவு கூறும் வண்ணம், கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஒரு 5.5 அங்குல க்வாட் எச்டி சூப்பர் அமோஎல்இடி வளைந்த டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறன் கொண்டு மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்குகிறது. ஒரு ஒற்றை கோர் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 8890 சிப்செட் கொண்டு இயங்குகிறது.

தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு
மேலும், சாதனத்தின் பெயர் குறிப்பிடுவது போல, எஸ்7 எட்ஜ் ஆனது எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போன் போன்றே ஒரு விளிம்பு காட்சி கொண்டுள்ளது மற்றும் தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஐபி68 சான்றிதழும் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்குகிறது என்றாலும் சாம்சங் ஏற்கனவே கேலக்ஸி பீட்டா திட்டம் வழியாக சாதனத்தில் ஆண்ட்ராய்டு நௌவ்கட் சோதனையை நிகழ்த்துகிறது.

12 மெகாபிக்சல் கேமரா
கேமரா துறையை பொறுத்தமட்டில் சாதனம் எப்1.7 துளை உடனான ஒரு 12 மெகாபிக்சல் கேமரா தவிர பேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் (PDAF) தொழில்நுட்பம், மோஷன் பனோரமா, மோஷன் போட்டோ மற்றும் ஹைப்பர் லேப்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது. முன்பக்கம் 5 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது.

3600எம்ஏஎச் பேட்டரி
ஒரு இரட்டை சிம் சாதனமான கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஒரு கலப்பு இரட்டை சிம் ஆதரவை வழங்குகிறது. பேட்டரி அடிப்படையில், கேலக்ஸி எஸ்7 எட்ஜ் 3600எம்ஏஎச் பேட்டரி ஒன்றை நிறுவியுள்ளது, இது வேகமான சார்ஜிங் வசதிகளுடன் வயர்லெஸ் சார்ஜிஙகையும் ஆதரிக்கும்.


Click it and Unblock the Notifications