அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 மற்றும் எஸ்6 எட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டது.

By Meganathan
|

உலகம் முழுவதிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் எஸ் 6 மற்றும் எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போன்கள் ஓரு வழியாக வெளியாகிவிட்டது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்6 மற்றும் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பாருங்கள்..

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

கேலக்ஸி எஸ்6 டிஸ்ப்ளேவை பொருத்த வரை 5.1 இன்ச் மற்றும் க்யூஹெச்டி ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. அதி நவீன வடிவமைப்பு மற்றும் கிளாஸ் பாடி மற்றும் மெட்டல் ப்ரேம் கொண்டுள்ளதோடு கருப்பு, வெள்ளை, ப்ளாட்டினம் கோல்டு மற்றும் டோபாஸ் ப்ளூ நிறங்களில் கிடைக்கின்றது.

பிராசஸர்

பிராசஸர்

எதிர்பார்த்ததை போல கேலக்ஸி எஸ் 6 புதிய 14 நானோமீட்டர் பிராசஸர், 64-பிட் சிப்செட் மற்றும் 3ஜிபி ராம் கொண்டிருப்பதால் வேகமான பிராசஸர் என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றது.

கேமரா

கேமரா

16 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு குறைந்த வெளிச்சத்தில் துள்ளியமான புகைப்படங்களை எடுக்கும் லென்ஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு ஆட்டோ ரியல் ஹெச்டிஆர் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

இம்முரை சாம்சங் 16 ஜிபி மெமரி ஆப்ஷன்களை வழங்கமால் 32, 64 மற்றும் 128 ஜிபி மெமரிகளை வழங்கி இருப்பதோடு கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயங்குதளம்

இயங்குதளம்

ஆன்டிராய்டு லாலிபாப் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் எல்டிஈ கேட்.6, வைபை மற்றும் ப்ளூடூத் 4.1, என்எப்சி, ஜிபிஎஸ், GLONASS Beidou, IR blaster மற்றும் எப்எம் ரேடியோ இருப்பதோடு 2550 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

கேலக்ஸி எஸ்6 எட்ஜ் டிஸ்ப்ளே

கேலக்ஸி எஸ்6 எட்ஜ் டிஸ்ப்ளே

சாம்சங் நிறுவனம் எட்ஜ் வகை எஸ்6 ஸ்மார்ட்போனில் 5.1 இன்ச் குவாட் ஹெச்டி 1440 x 2560 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுத்துள்ளது.

பேட்டரி

பேட்டரி

கேலக்ஸி எஸ் 6 எட்ஜ் பேட்டரியானது 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 4 மணி நேரத்திற்க்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

புத்தம் புதிய 14nm 64-பிட் சாம்சங் எக்ஸைனோஸ் ஆக்டாகோர் சிப் கொண்டு இயங்குவதோடு 3ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. இயங்குதளத்தை பொருத்த வரை ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்டுள்ளது.

மெமரி

மெமரி

சாம்சங் கேலக்ஸி எஸ்6 போன்றே கேலக்ஸி எஸ்6 எட்ஜிலும் 16 ஜிபி மெமரி ஆப்ஷன்களை வழங்கமால் 32, 64 மற்றும் 128 ஜிபி மெமரிகளை வழங்கி இருப்பதோடு கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியை வழங்கவில்லை.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது. முன்பக்க கேமராவில் வைடு ஆங்கிள் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S6 And S6 Edge announced. Here you will find the full specification of the newly announced samsung galaxy s6 and samsung galaxy s6 edge

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X