இந்தியாவில் ரூ. 49,900க்கு வெளியானது சாம்சங் கேலக்ஸி எஸ்6

Posted By:

சில நாட்களுக்கு முன் சாம்சங் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேல்கஸி எஸ்6 ஸ்மார்ட்போனினை அறிமுகப்படுத்தியது. பார்சிலோனாவில் நிடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று வெளியானது.

கீழே வரும் ஸ்லைடர்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

கேலக்ஸி எஸ்6 டிஸ்ப்ளேவை பொருத்த வரை 5.1 இன்ச் மற்றும் க்யூ ஹெச்டி ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. அதி நவீன வடிவமைப்பு மற்றும் கிளாஸ் பாடி மற்றும் மெட்டல் ப்ரேம் கொண்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

கேலக்ஸி எஸ் 6 புதிய 14 நானோமீட்டர் பிராசஸர், 64-பிட் சிப்செட் மற்றும் 3ஜிபி ராம் கொண்டிருக்கின்றது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஸ்மார்ட்போனில் 32, 64 மற்றும் 128 ஜிபி வரை மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

16 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு குறைந்த வெளிச்சத்தில் துள்ளியமான புகைப்படங்களை எடுக்கும் லென்ஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு ஆட்டோ ரியல் ஹெச்டிஆர் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

மென்பொருள்

மென்பொருள்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்டு இயங்குவதோடு டச் விஸ் யூஸர் இன்டர்பேசும் கொண்டிருக்கின்றது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

இந்த கருவி 143.40*70.50*6.80 எம்எம் இருப்பதோடு 138 கிராம் எடை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

வைபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, Infrared, 3.5எம்எம் ஆடியோ ஜாக், 3G மற்றும் பல புதிய சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

கேலக்ஸி எஸ்6 கழற்ற முடியாத 2550 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

விலை

விலை

கேலக்ஸி எஸ்6 சந்தையில் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றும் விலை 32ஜிபி/ 64ஜிபி/ 128ஜிபி என முறையே ரூ.49,900, ரூ.55,900 மற்றும் 60,900 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung Galaxy S6 Has Been Launched in India at Rs 49,900.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot