மின்னலாய் வெளியான சாம்சங் கருவிகள்..!

By Meganathan
|

பல மாத எதிர்பார்ப்பு, ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கட்டுரைகளுக்கு பதில் அளித்திருக்கின்றது தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங். சாம்சங் நிறுவனம் சார்பில் நேற்று நடைபெற்ற அறிமுக விழாவில் அந்நிறுவனத்தின் இரு கருவிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்+ மற்றும் கேலக்ஸி நோட் 5 என இரு கருவிகளை வெளியிட்டதோடு சாம்சங் கியர் எஸ்2 என்ற கருவியை வெளியிடுவது குறித்த தகவல்களையும் அளித்திருக்கின்றது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்+

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்+

5.7 இன்ச் டூயல் கர்வ் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 7420 பிராசஸர், 4எக்ஸ் கார்டெக்ஸ் ஏ53, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 2.1 ஜிகாஹெர்ட்ஸ் 4எக்ஸ் கார்டெக்ஸ் ஏ57 மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

32 மற்றும் 64 என இரு மாடல்களில் இன்டர்னல் மெமரியும் ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

க்வர்டி

க்வர்டி

க்வர்டி கீபோர்டு கவர் கொண்டிருப்பதோடு ப்ளாக் சஃப்பையர் மற்றும் கோல்டு ப்ளாட்டினம் நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு விற்பனை ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 5

சாம்சங் கேலக்ஸி நோட் 5

5.7 இன்ச் க்யூஎச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7420 பிராசஸர் மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

மெமரியை பொருத்த வரை 32 மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது, மெமரியை நீட்டிக்கும் வசதி இந்த கருவியில் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிலாப் இயங்குதளம் மற்றும் டச்விஸ் யூஸர் இன்டர்ஃபேஸ் மூலம் இயங்குகின்றது.

பேட்டரி

பேட்டரி

3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த கருவியில் LTE Cat.6, வைi-பை ac, ப்ளூடூத் 4.2, என்எப்சி, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், GLONASS, Beidou, சாம்சங் பே போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னோட்டம்

முன்னோட்டம்

சாம்சங் நிறுவனம் கியர் எஸ்2 ஸ்மார்ட்வாட்ச் கருவியினை 2015 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐஎஃப்ஏ விழாவில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகின்றது.

மோட்டோ 360

மோட்டோ 360

மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் போன்றே புதிய கருவியும் வட்ட வடிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here the specs of recently announced Samsung Galaxy S6 Edge+, Galaxy Note 5

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X