Home
Mobile

விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளியாக கேலக்ஸி S5 சாம்சங் அதிரடி!!

By Prabakaran

ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றி படைப்பான ஐபோன் 5யை தொடர்ந்து அண்மையில் ஐபோன் 5Sயை வெளியிட்டது. இந்த ஐபோனும் மக்களிடையே அமோக வரவேற்ப்பு பெற்றது. ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றி படைப்பை வெளியிட்ட பிறகு இப்பொழுது எல்லோருடைய எதிர்பார்ப்பும் சாம்சங்கின் வெற்றி படைப்பான் கேலக்ஸி S4யை அடுத்து கேலக்ஸி S5 எப்பொழுது வெளிவரும் என்பதை பற்றி தான் இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S5யை 2014ன் தொடக்கத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்நிறுவனம் கேலக்ஸி S4யை வெளியிட்டது. கேலக்ஸி S4ன் டிஸைன் பற்றி நிறைய விமர்சனங்கள் எழுந்தன. ஆப்பிளின் ஐபோன் அளவுக்கு இதன் டிஸைன் குவாலிட்டி இல்லை என பேச்சுக்கள் இருந்தது.

உலகின் முன்னனி நிறுவனமான சாம்சங் தனது பெரும்பாலான மொபைல்களை பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாடியுடன் தான் வெளிவந்துள்ளன. ஆப்பிளை போன்று மெட்டல் பாடி மற்றும் குவாலிட்டி டிஸைனுடன் சாம்சங் மொபைல்கள் வருவதில்லை என்ற கருத்து வெகு நாட்களாக நிலவி வருகிறது.

அதனால்தான் சாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 3யை லெதர் கோட்டிங்குடன் புதிய டிஸைனில் உருவாக்கியிருந்தது. இதுவரை எழுந்த விமர்சனங்களுக்கு முற்று புள்ளியாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S5யை மெட்டல் பாடியுடன் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளின் மேக் புக் மற்றும் ஐபேட் மினி டேப்லெட்டை உற்பத்தி செய்யும் கம்பெனியான கேட்ச்சர் டெக்னாலஜி கம்பெனியுடன் (catcher technology co) சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்5யை மெட்டல் பாடியுடன் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.

சாம்சங் நிறுவனம் தனது ஒரு ஹை ரேஞ் ஸ்மார்ட்போனையாவது மெட்டல் பாடியுடன் வெளியிட வேண்டும் என்று முனைப்புடன் இருப்பதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாம்சங் மொபைலின் தலைமை அதிகாரியான ஷின் ஜாங்-கியூன், கேலக்ஸி S5 64-பிட் பிராசஸருடன் வெளிவரும் என்று தெரிவித்தார்.

கேலக்ஸி S5யின் முழு அம்சங்களை பற்றி நாம் இப்பொழுது நாம் தெளிவாக முடியாது என்றாலும் அதை பற்றி வெளியான சில அதிரடியான சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

இமேஜ் சோர்ஸ்: கேலக்ஸி S5இன்போ

புதிய ஸ்மார்ட்போன்கள் கான்செப்ட் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்.

#1

#1

அண்மையில் வெளியான் தகவலின் அடிப்படையில் ஆப்பிள் ஐபோன் 5S போன்று சாம்சங் கேலக்ஸி S5ம் 64-பிட் பிராசஸருடன் வெளிவரும் என தெரிகிறது.

சாம்சங் மொபைலின் தலைமை அதிகாரியும் கேலக்ஸி S5 64-பிட் பிராசஸருடன் வெளிவரும் என்று கடந்த வாரம் தெரிவித்தார்.

#2

#2

கேலக்ஸி S5 எந்த அளவு டிஸ்பிளே அல்லது ஸ்கிரீன் சைஸ் உடன் வெளிவரும் என்பதை பற்றி உறுதியான தகவல்கள் எதவும் இல்லை. இது 4K ரெசலூஸன் மற்றும் புல் ஹச்டி டிஸ்பிளே உடன் வெளிவரும் என்று எதிபார்க்கப்படுகிறது.

#3

#3

கேலக்ஸி S5யில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 16 மெகாபிக்சல் கேமரா இருக்கும் என்று தகவல்கள் பதிவாகியுள்ளது

#4

#4

கேலக்ஸி நோட் 3 3ஜிபி ராம் உடன் வந்துள்ளது. அதனால் கேலக்ஸி S5யும் 3ஜிபி ராம் உடன் வரும் எனலாம்.

#5

#5

சாம்சங்கின் அனைத்து வெற்றி மாடல் ஸ்மார்ட்போன்களும் கூகுளின் ஆன்டிராய்ட் ஓஎஸ் உடன் தான் வந்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதத்தில் கூகுள் வெளியிட இருக்கும் ஆன்டிராய்ட் கிட்காட் 4.4 மொபைல் ஓஎஸ் உடன் கேலக்ஸி S5 வெளிவரும்.

#6

#6

சாம்சங் கேலக்ஸி S4, 2,600mAh பேட்டரியுடன் வெளிவந்தது. கேலக்ஸி S5 அதை விட அதிகமாக 3,200mAh பேட்டரி அல்லது 4,000mAh பேட்டரியுடன் வெளிவரும்.

#7

#7

கேலக்ஸி S5 FM ரேடியோ உடன் வெளிவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஏனென்றால் இந்தியாவில் மிகப்பெரிய பொழுது போக்கு அம்சமாகும்.

இதுவரை எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளியாக சாம்சங் கேலக்ஸி S5 மெட்டல் பாடியுடன் வெளிவருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X