கேலக்ஸி S5 ல் அப்படி என்னதான் இருக்கிறது...இதோ பார்ப்போம்
சாம்சங்கின் மற்ற மாடல் மொபைல்களை விட S மாடல் மொபைல்களின் மீது எப்போதும் மற்றவர்களின் கவனம் அதிகம் இருக்கும் காரணம் சாம்சங்கின் இந்த மாடல் மொபைல்கள் நிச்சயம் ஏதேனும் புது ஆப்ஷனுடன் வெளிவரும்.
அந்தவகையில் தற்போது லேட்டஸ்ட்டாக வெளியாகி நம் அனைவரும் வாங்க வேண்டும் என்று துடிக்கும் மொபைல் தான் சாம்சங்கின் கேலக்ஸி S5 ஆகும்.
ஆப்பிளின் ஐ போன் 5S போலவே இதிலும் பிங்கர் பிரிண்டர் சென்சாருடன் இந்த மொபைலை வெளியிட்டது சாம்சங் நிறுவனம்.
மேலும் இதில் இதில் இதன் திரை 5.10 இன்ச் அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.
இதில் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் கிடைக்கும். இதில் முக்கியமாக விரல் ரேகை ஸ்கேனர் முன்பு கூறியது போல் இருக்கின்றது இதன் கேமரா 16 எம்.பி. திறன் மற்றும் ISO CELL சென்சார் கொண்டு கிடைக்கும்.
இதன் பிராஸஸர் 2.5GHz ஸ்னேப்டராகன் 800 கொண்டுள்ளது இதனால் இதன் வேகமும் நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம். மேலும் இதன் ரேம் மெமரி 3 ஜிபி க்கு உள்ளது.
அதனுடன் இதன் பேட்டரி 2800mAh திறனுடன் இருக்கிறது இதோ இந்த மொபைலை மேலும் சில தகவல்கள்....

#1
இதில் 32GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது மேலும் 16MP க்கு கேமராவும் இதில் உள்ளது

#2
அழிகய வெளித்தோற்றத்துடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது எனினும் இந்த மொபைலின் விற்பனை ஆப்பிளின் ஐ போன் 5S அளவுக்கு இல்லை எனலாம்

#3
ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட்டுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது

#4
மிகவும் வேகமாக செய்ல்படக்கூடிய ஆக்டோ கோர் பிராஸஸர் இந்த மொபைலில் உள்ளது இதனால் மொபைலின் செயல்பாடுகள் வேகமாக நடக்கும்

#5
இந்த மொபைலை சாம்சங்கின் கேலக்ஸி கீர் ஸ்மார்ட் வாட்சுடன் நாம் கனெக்ட் செய்து கொள்ளலாம் இதன் விலை தற்போது ரூ.36,490 ஆகும்
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/SBU0l35BRFc" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications