சாம்சங் கேலக்ஸி எஸ்3 நியோ விலை மீண்டும் குறைக்கப்பட்டது

Posted By:

சாம்சங் கேலக்ஸி எஸ்3 நியோ சில மாதங்களுக்கு முன் விலை குறைபக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே, இந்த ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது தான் புதிய செய்தி ஆகும்.

கேலக்ஸி எஸ் 3 நியோ ஆரம்பத்தில் ரூ.15,999க்கு வெளியிடப்பட்டது முதற்கட்டமாக ரூ.12,499 என குறைக்கப்பட்டது, இன்று இதன் விலை ரூ.11,499 ஆக மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்3 நியோ விலை மீண்டும் குறைக்கப்பட்டது

இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.8 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன் மற்றும் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மற்றும் ஹெக்ஸா கோர் பிராசஸர் மற்றும் 1.5 ஜிபி ராம் கொண்டிருப்பதோடு ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன் மூலம் இயங்குகின்றது.

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 1.9 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

 

English summary
Samsung Galaxy S3 Neo Faces Another Price Cut. Samsung Galaxy S3 Neo which faced a price cut few months back, has further been dropped to Rs. 11,499 recently, on the e-retail store Flipkart.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot