கேலக்ஸி எஸ்-3 மற்றும் எஸ்-3 மினி ஒப்பீடு!

|

கேலக்ஸி எஸ்-3 மற்றும் எஸ்-3 மினி ஒப்பீடு!

இப்போது சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் பற்றி தான் பேச்சாக உள்ளது. இதனால் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்-3 மினி மற்றும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஒப்பீட்டினை பார்க்கலாம்.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும். கேலக்ஸிஎஸ்-3 மினி ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.

கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 111.5 எடையினையும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 133 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 4412 குவாட் சிப்செட் பிராஸர் வசதியை வழங்கும். கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரை கொடுக்கும்.

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட ஆன்ட்ராய்டு பீம், லைவ் வால்பேப்பர் ப்ரிவ்யூ போன்ற வசதிகளை எளிதாக பெற முடியும்.

கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் வழங்கும். இதனால் புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங், வீடியோ காலிங் போன்ற வசதிகளை பெறளாம். கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமரா, 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பயன்படுத்த முடியும்.

கேல்கஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் வழங்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வசதி கொண்ட வெர்ஷனை பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி 1,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி வசதியினையும், சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 2,100 எம்ஏஎச் பேட்டரியினையும் பெறலாம். கேல்கஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி மெமரி வெர்ஷன் ரூ. 37,990 விலையிலும், 32 ஜிபி மெமரி ரூ. 40,900 விலையிலும் பெறலாம். கேல்கஸிஎஸ்-3 மினி ஸ்மார்ட்போனின் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X