ஆன்ட்ராய்டு 4.1 கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி ஸ்மார்ட்போன் இப்பொழுது இந்தியாவில் ரூ.24,349க்கு கிடைக்கிறது.

அக்டோபர் 11ல் யுகே சந்தைகளில் வெளியிடப்பட்ட இந்த கேலக்ஸி எஸ்3 மினி ஸ்மார்ட்போன் நீண்ட நாட்களாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
ஆனால் தற்பொழுது கேலக்ஸி எஸ்3 மினியானது ட்ரேடஸ்.காம் என்ற இணையத்தளத்தில் ரூ.24,349க்கு கிடைக்கிறது.
இந்த கேலக்ஸி எஸ்3 மினி, 4" சூப்பர் AMOLED டச்ஸ்க்ரீன் திரையைக்கொண்டுளது. மற்றும் 800 x 400 பிக்சல் ரெசுலூசன் கொண்டது. மேலும் இது 1GHZ டூயல்கோர் ப்ராசாசரும், ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குதளதைக்கொண்டுள்ளது. இதில் வீடியோ காலிங்காக 5எம்பி ரியர் கேமராவும், VGA கேமராவும் உள்ளது. 8ஜிபி/16 ஜிபி கொண்ட உள்நினைவகமும், 32ஜிபி அளவுகொண்ட மைக்ரோ எஸ்டி கார்டு பொருத்தக்கூடிய ஸ்லாடும் உள்ளது. மேலும் இதில் 1ஜிபி ரேம், Wi-Fi 802.11, ப்ளுடூத், NFC. மைக்ரோ USB 2.0 ஆகியவை உள்ளன.
இந்த கேலக்ஸி எஸ்3 மினி மேலும் பல சிறப்பம்சம்களைக்கொண்டது. அவையாவன, S வாய்ஸ், ஸ்மார்ட் ஸ்டே, டைரக்ட் கால், பட்டி போட்டோ ஷேர் மற்றும் S பீம்.
டாப் 5 - கேலக்ஸி எஸ்3 மினிக்கு போட்டியாளர்கள்:
கேலக்ஸி எஸ்3 மினி, இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைவதால், ஏற்க்கனவே உள்ள பல ஸ்மார்ட்போன்களுடன் போட்டிபோடவேண்டியுள்ளது. அவற்றுள் டாப் 5 ஸ்மார்ட் போன்களை இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications