Home
Mobile

புத்தாண்டில் புது வண்ணமயமாகும் கேலக்ஸி எஸ்3 மினி மற்றும் நோட் 2

By Karthikeyan
புத்தாண்டில் புது வண்ணமயமாகும் கேலக்ஸி எஸ்3 மினி மற்றும் நோட் 2

புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில் எல்லா மொபைல் நிறுவனங்களும் தங்களது புதிய படைப்புகளை புத்தாண்டின் தொடக்கத்திலேயே களமிறக்க கங்கனம் கட்டிக் கொண்டிருக்கின்றன. இது சாம்சங் நிறுவனமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் சாம்சங் தனது கேலக்ஸி எஸ்3 மினி மற்றும் கேலக்ஸி நோட் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான வண்ணங்களை வரும் புத்தாண்டில் அளிக்க இருக்கிறது.

குறிப்பாக தனது தீவிர ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இதுவரை கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் வந்த கேலக்ஸி எஸ்3 மினி போனுக்கு ஆனிக்ஸ் கருப்பு, கார்னட் சிவப்பு மற்றும் டைட்டன் க்ரே ஆகிய நிறங்களை வழங்க இருக்கிறது. ஆகவே இந்த புதிய நிறங்களில் வரும் கேலக்ஸி எஸ்3 இன்னும் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும்.

அதே நேரத்தில் கேலக்ஸி நோட் 2 போனுக்கு ரூபி ஒயின், டோப்பஸ் ஊதா மற்றும் ஆம்பர் ப்ரவுன் ஆகிய நிறங்களை வழங்க இருக்கிறது. ஆகவே இந்த புதிய நிறங்களில் வரும் இந்த கேலக்ஸி போன்கள் 2013ல் பர்சலோனாவில் நடைபெறும் உலக மொபைல் காங்கிரசில் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கேலக்ஸி எஸ்3 மட்டுமே ஊதா, ப்ரவுன், வெள்ளை, சாப்பையர் கருப்பு, டைட்டானியம் க்ரே மற்றும் கார்னட் சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கிறது. ஆகவே பல வண்ணங்களில் வர இருக்கும் எஸ்3 மினி மற்றும் நோட் 2 ஆகிய போன்கள் சாம்சங் ரசிகர்களை பெரிதும் கவரும் என்று உறுதியாக நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X