ஜெல்லி பீன் அப்டேட்டால் இந்தியாவில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்3 வைத்திருப்பவர்கள் அதிர்ச்சி

Posted By: Karthikeyan
ஜெல்லி பீன் அப்டேட்டால் இந்தியாவில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்3 வைத்திருப்பவர்கள் அதிர்ச்சி

சாம்சங்கின் வெற்றி பெற்ற ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்3 சமீபத்தில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேட்டைப் பெற்றது. இந்த அப்டேட் வருவதற்கு முன் இந்தியாவில் இருந்த சாம்சங் ரசிகர்கள் அந்த ஜெல்லி பீன் அப்டேட்டுக்காகத் தவமிருந்து காத்திருந்தனர். ஆனால் இந்த அப்டேட்டைப் பெற்றவுடன் அவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி.

ஏனெனில் ஜெல்லி பீன் பெற்ற அவர்களுடைய கேலக்ஸி எஸ்3 ஒரு சில தொழில் நுட்ப கோளாறு காரணமாக சரிவர இயங்காமல் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் உள்ள எஸ்3 போன்களில் ஜெல்லி பீன் அப்டேட் செய்வதையும் சாம்சங் நிறுவ்தி வைத்திருக்கிறது. அதோடு அதற்கான விளக்கத்தையும் சமீபத்தில் சாம்சங் தெரிவித்திருக்கிறது.

அதாவது ஜெல்லி பீனை சாம்சங் அப்டேட் செய்யும் போது அதில் ஒரு சில வைரஸ்கள் இருந்ததாக கூகுள் தெரிவித்திருக்கிறது. அதனால்தான் ஜெல்லிபீன் இயங்கு தளத்தில் எஸ்3 போன்களால் சரிவர இயங்க முடியவில்லை என்றும் கூகுள் தெரிவித்திருக்கிறது.

அதே நேரத்தில் விரைவில் இந்த பிரச்சினையை சரி செய்துவிடுவதாக சாம்சங் அறிவித்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்த அப்டேட் நடைபெற்றது. ஆனால் அதற்குள் இந்த பிரச்சினை ஏற்பட்டதால் அது இந்திய சாம்சங் வாடிக்கையாளர்களைக் கலவரப்படுத்தி இருக்கிறது.

அதனால் ஜெல்லி பீன் இயங்குதள அப்டேட்டைப் பெற இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்3 போன்களை வைத்திருப்பவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot