இந்தியாவில் கேலக்ஸி எஸ்3 போனை வைத்திருப்பவர்களுக்கு விரைவில் ஜெல்லி பீன் அப்டேட்டை வழங்கும் சாம்சங்

Posted By: Karthikeyan
இந்தியாவில் கேலக்ஸி எஸ்3 போனை வைத்திருப்பவர்களுக்கு விரைவில் ஜெல்லி பீன் அப்டேட்டை வழங்கும் சாம்சங்

நவம்பர் 2 வாரத்தில் இந்தியாவில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேட் செய்யப்பட்டது. ஆனால் ஜெல்லி பீன் இயங்கு தளம் அப்டேட் செய்யப்பட்டவுடன் ஒரு சில வைரஸ்கள் காரணமாக இந்தியாவில் உள்ள கேலக்ஸி எஸ்3 போன்கள் சரியாக இயங்கவில்லை.

இதனால் இந்தியாவில் உள்ள கேலக்ஸி எஸ்3 போன்வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால் சாம்சங் ஜெல்லி பீன் அப்டேட்டைத் திரும்பப் பெற்றனர். மேலும் வைரஸ் பிரச்சினைகளை சரிசெய்த பின்பு ஜெல்லி பீன் அப்டேட்டை வழங்குவதாக அறிவித்திருந்தது.

தற்போது எல்லா பிரச்சினைகளையும் சரி செய்துவிட்டு இந்தியாவில் உள்ள கேலக்ஸி எஸ்3 போன்களில் ஜெல்லி பீன் அப்டேட்டைச் செய்ய சாம்சங் தயாராகிவிட்டது. அதனால் இந்தியாவில் கேலக்ஸி எஸ்3 வைத்திருப்பவர்களும் உற்சாகமாகி இருக்கின்றனர்.

மேலும் இந்த அப்டேட்டைப் பற்றிய முறையான அறிவிப்பை வரும் நாள்களில் சாம்சங் அறிவிக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த ஜெல்லி பீன் அப்டேட் சாம்சங்கின் கைஸ் சாப்ட்வேர் மூலம் செய்யம்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஜெல்லி பீன் அப்டேட் மூலம் கேலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போனில் உள்ள நியூ லைவ் கேமரா, கம்கார்டர் பில்டர்கள், உள்ளரங்க மற்றும் குறைந்த வெளிச்சத்தி எடுக்கப்பட்ட போட்டோக்கள் போன்றவை மேம்பாடு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்தியாவில் கேலக்ஸி எஸ்3 போனை வைத்திருப்பவர்கள் செட்டிங்ஸ் → எபவுட் → சாப்ட்வேர் அப்டேட் ஆகியவற்றுக்குள் சென்று ஜெல்லி பீனின் அப்டேட்டை அறிந்து கொள்ளலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot