Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 மற்றும் மோட்டோ டிராய்டு-4 ஸ்மார்ட்போன்:ஒப்பீடு

By Super
சாம்சங் கேலக்ஸி எஸ்-3 மற்றும் மோட்டோ டிராய்டு-4 ஸ்மார்ட்போன்:ஒப்பீடு

அதிகப்படியான வாடிக்கையாளர்களின் ஆர்வத்தினை தன்பக்கம் திரும்ப வைத்த நிறுவனங்களின் பட்டியலில் சாம்சங், மோட்டோரோலா நிறுவனமும் சேரும். இந்நிறுவனங்களின் இரண்டு ஸ்மார்ட்போனாகிய கேலக்ஸி எஸ்-3 மற்றும் மோட்டோரோலா டிராய்டு-4 பற்றி இங்கே ஒரு சிறிய ஒப்பீட்டினை பார்ப்போம்.

கேலக்ஸி எஸ்-3 மற்றும் மோட்டோரோலா டிராய்டு-4 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். ஆனால் அதில் சிறிய வித்தியாசம் இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்திலும் இயங்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் சூப்பர் அமோல்டு III தொழில் நுட்பத்தினை வழங்கும். இதில் 4.65 இஞ்ச் அகன்ற தொடுதிரை வசதியினை பெற முடியும். பிரம்மாண்ட திரையினை வழங்குவதால் இதில் 1280 X 1024 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறவும் முடியும்.

மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போனும் தொழில் நுட்பத்தில் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் டிஎப்டி தொழில் நுட்பம் கொண்ட தொடுதிரை வசதியின் மூலம் 4.0 இஞ்ச் திரையின் மூலம் 16எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும்.

கேலக்ஸி-3 ஸ்மார்ட்போனை காட்டிலும், மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போனின் திரை சற்று குறைவு தான். ஆனால் இதில் எந்த தகவல்களையும் புகைப்படத்தினையும் தெளிவாக பார்க்கலாம். டிராய்டு-4 ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவினால் அற்புதமான துல்லியத்தினை பெறலாம். இந்த கேமரா 3264 X 2448 பிக்ஸல் துல்லியத்தில் புகைப்படத்தினை வழங்கும். கேலக்ஸி-3 ஸ்மார்ட்போன் 12 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த 2 ஸ்மார்ட்போன்களும் முகப்பு கேமராவினை வழங்கும். டிராய்டு-4 ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே 3ஜி வசதியை எளிதாக பயன்படுத்தலாம். ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன்கள் வைபை தொழில் நுட்பத்தினையும் வழங்கும்.

கேலக்ஸி-3 மற்றும் டிராய்டு-4 ஸ்மார்ட்போன்கள் சிறப்பான பேட்டரி வசதியினை கொடுக்கும் என்று தாராளமாக சொல்லலாம். மோட்டோரோலா டிராய்டு-4 ஸ்மார்ட்போன் 1,785 எம்எச் பேட்டரி வசதியினை தரும். சாம்சங் கேலக்ஸி-3 ஸ்மார்ட்போன் 2,500 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் சிறப்பான டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமிற்கு சப்போர்ட் செய்கிறது.

இந்த இரண்டு சூப்பர் ஸ்மார்ட்போன்களுமே இன்னும் வெளியிடப்படவில்லை. இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதனால் இதன் விலைகளை தெரிந்து கொள்ள இன்னும் சிறிது காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X