Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 மற்றும் எச்டிசி ஒன் எக்ஸ்: ஓர் சிறிய ஒப்பீடு

By Super
சாம்சங் கேலக்ஸி எஸ்-3 மற்றும் எச்டிசி ஒன் எக்ஸ்: ஓர் சிறிய ஒப்பீடு

ஸ்மார்ட்போன்களில் அதிகம் பிரசித்தி பெற்ற இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்-3 மற்றும் எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய சிறிய ஒப்பீட்டை இங்கே காணலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் அகன்ற திரையாக 4.8 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை காட்டிலும் சற்று சிறிய திரை கொண்டதாக இருக்கிறது.

இதில் 4.7 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும்.

இந்த 2 ஸ்மர்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் தான் இயங்கும். இதனால் சிறந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்த முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் சிறப்பான செயல்பாடுகளை பெற இதில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் பிராசஸரும் மற்றும் எக்ஸினோஸ் 4212 குவாட் சிப்செட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் பிராசஸர் மற்றும் என்விஐடிஐஏ டெக்ரா-3 சிப்செட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டது. இதன் மூலம் 3264 X 2449 பிக்ஸல் துல்லியத்தினை வழங்கும் புகைப்படமும், வீடியோ ரெக்கார்டிங் வசதியும் பெற முடியும்.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் மற்றும் எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 1.3

மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் 3ஜி மற்றும் 4ஜி சேவையினை பெறலாம். எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினை மட்டும் எளிதாக பயன்படுத்த முடியும்.

பேட்டரி வசதியில் எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளதையும் விட, அதிக ஆற்றலினை வழங்கும் பேட்டரியினை பெற்றுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்.

எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 1,800 எம்ஏஎச் பேட்டரியும், சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு லித்தியம் பாலிமர் 2,100 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப விவரங்களோடு சேர்த்து விலையை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை ரூ.38,000 ஒட்டிய விலையிலும், எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.30,000 விலையிலும் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X