Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 200எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. வருகிறது புது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ (Samsung Galaxy S27 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது GSMA டேட்டாபேஸ் தளத்தில் காணப்பட்டுள்ளது. அதுவும் இந்த போனின் மாடல் நம்பர் SM-S957B/DS என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ அம்சங்கள் (Samsung Galaxy S27 Pro specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Dynamic AMOLED டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. வருகிறது புது Samsung 5ஜி போன்..

200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே ஸ்மார்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் அல்லது 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும்.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் சற்று உயர்வான விலை அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S27 Pro specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X