இப்படி இருக்கனும் ஸ்மார்ட்போன்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 5200mAh பேட்டரி.. புது S சீரிஸ்.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்களை திக்குமுக்காட வைக்கும்படியான பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்27 சீரிஸ் (Samsung Galaxy S27 Series) வெளியாக இருக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ (Samsung Galaxy S27 Pro) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா (Samsung Galaxy S27 Ultra) ஸ்மார்ட்போன்களின் பீச்சர்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் மாடல்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகின. ஆனால், அதற்கு முன்னதாகவே பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்து, எதிர்பார்ப்பை எகிற வைத்தன. அதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்27 சீரிஸ் மாடல்களின் பீச்சர்களும் கசிய தொடங்கி இருக்கின்றன. கேலக்ஸி எஸ்27 ப்ரோ மற்றும் அல்ட்ரா மாடல்களின் பீச்சர்கள் கசிந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ அம்சங்கள் (Samsung Galaxy S27 Pro Specifications): 6.4 இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 2K ரெசொலுஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஆன்டி-ரெஃப்ளெக்டிவ் கோட்டிங் (Anti-reflective Coating) கிடைக்கிறது. மேலும், பிரைவசி டிஸ்பிளேவாக (Privacy Display)இருக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Octa Core Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது. அதேபோல சாம்சங் நிறுவனத்தின் எக்ஸினோஸ் 2700 (Samsung Exynos 2700) சிப்செட் பெயரும் இடம்பெறுகிறது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.
மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. டெலிபோட்டோவில் 3.5X ஆப்டிகல் ஜூமிங் உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டருடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 5200mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது. கியூஐ2 வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S27 Ultra Specifications): 6.9 இன்ச் எல்டிபிஓ எம்16 ஓஎல்இடி (LTPO M16 OLED) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. 2K ரெசொலூஷன் கிடைக்க உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா இருக்கப் போகிறது.
200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் சாம்சங் எச்பி6 (HP6) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சென்சார் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. 5X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்க இருக்கிறது. அரிசான்டல் கேமரா டெகோ கிடைக்க இருக்கிறது.
5700mAh பேட்டரி கொடுக்கப்பட இருக்கிறது. கியூஐ2 சார்ஜிங் மற்றும் அலுமினியம் மிடில் ஃபிரேம் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. விலை விவரங்கள் மற்றும் டிசைன் விவரங்கள் தெரியவில்லை. முக்கிய பீச்சர்களே கசிந்துவிட்டதால், விலை விவரங்கள் அடுத்தடுத்து கசிய வாய்ப்புள்ளது. அல்ட்ரா பிரீமியம் செக்மெண்ட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications