சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி போன் அறிமுகம்.. 50எம்பி கேமரா.. 7 வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்.. என்ன விலை?
சாம்சங் நிறுவனம் Galaxy Unpacked நிகழ்வில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அம்சங்கள் (Samsung Galaxy S26 specifications): 6.3-இன்ச் ஃபுல் எச்டி இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 Protection)உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

டெகா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2600 பிராசஸர் (Deca-Core Samsung Exynos 2600 processor) உடன் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராஸசர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் எக்ஸ்கிளிப்ஸ் 960 ஜிபியு (Xclipse 960 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது.
One UI 8.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 7 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா +10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிப்ளி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 4கே வீடியோ பதிவு செய்யும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இதில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளது.
IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11பிஇ, புளூடூத் 5.4,ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

4300எம்ஏஎச் பேட்டரி உடன் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 20W Qi2 வயர்லெஸ் சார்ஜ்ங், வயர்லெஸ் பவர்ஷேரிங் வசதிகளும் உள்ளன. கோபால்ட் வயலட், பிளாக், ஸ்கை ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 மாடலின் விலை USD 899.99 (இந்திய மதிப்பில் ரூ.81,815)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 மாடலின் விலை USD 1099.99 (இந்திய மதிப்பில் ரூ.99,995)
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. வரும் மார்ச் 11-ம் தேதி முதல் இந்த போன் பல நாடுகளில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








