Samsung போட்ட போடு.. 200MP கேமரா.. 60W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. புது Galaxy ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
கேலக்ஸி அன்பேக்டு 2026 இவென்ட் நடக்க இருக்கும் தேதி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஸ்மார்ட்போனின் கேமரா, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் கசிந்துவிட்டன. மேலும், விலை விவரங்களும் தெரியவந்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
கேலக்ஸி அன்பேக்டு 2026 இவென்ட் பிப்ரவரி 25ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, சாம்சங் கேலக்ஸி எஸ்26, சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கலாம். அல்ட்ரா மாடலின் முழு பீச்சர்களும் கசிந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S26 Ultra Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 7 (One UI 7) கொடுக்கப்பட உள்ளது. 6.9 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ-எட்ஜ் டைனாமிக் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா ஆர்மோர் 2 (Corning Gorilla Armor 2) பாதுகாப்பு கிடைக்கிறது.
200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 5X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது.
மேலும், 100X ஸ்பேஸ் ஜூமிங் மற்றும் லேசர் ஆட்டோ போகஸ் (Laser Autofocus) கிடைத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 4K ரெசொலூஷன் சப்போர்ட் கொண்ட 12 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.
25W கியூஐ3 வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.9 எம்எம் தடிமன் மற்றும் 214 கிராம் எடை கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, 4ஜி வோஎல்டிஇ, வை-பை 7 மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி உள்ளது. ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி கொண்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை 1469 அமெரிக்க டாலர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1,33,043ஆக இருக்கிறது. இது கசிந்த விலைகள் மட்டுமே. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் வெளியாகும்போது விலைகளில் மாற்றம் இருக்கும்.


Click it and Unblock the Notifications








