பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.4,500 ஆஃபரில் Samsung ஸ்மார்ட்போன்.. 5000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிரீமியம் ஸ்மார்ட்போனை பட்டையை கிளப்பும் தள்ளுபடி விலைக்கு வாங்கி திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பக்காவான நேரம் வந்துவிட்டது. 200 எம்பி கேமரா, 60W சார்ஜிங், 5000mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,24,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,500 தள்ளுபடி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.1,24,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்கள் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S26 Ultra Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 5 கேலக்ஸி 3என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite Gen 5 Galaxy 3nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கிடைக்கிறது. 7 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. பிரைவேட் ஆல்பம் (Private Album), க்நாக்ஸ் மேட்ரிக்ஸ் (Knox Matrix), நவ் நட்ஜ் (Now Nudge), நவ் ப்ரீப் (Now Brief) மற்றும் கான்வர்சேஷனல் பிக்ஸ்பை (Conversational Bixby) கிடைக்கிறது.
அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே ஃபீல் கொடுக்கும்படியான பீச்சர்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 6.9 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ- எட்ஜ் டைனாமிக் அமோலெட் (Infinity-O-Edge Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 (Corning Gorilla Armor 2) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா கொடுக்கிறது.
டெலிபோட்டோவிஸ் 3X ஆப்டிகல் ஜூம் கிடைக்கிறது. பெரிஸ்கோப் டெலிபோட்டோவில் 5X ஆப்டிகல் ஜூம் மட்டுமல்லாமல், 100X ஸ்பேஸ் ஜூம் கிடைக்கிறது. லேசர் ஆட்டோ போகஸ் (Laser Autofocus) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4K 60FPS வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 8K 30FPS வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 7.9 எம்எம் தடிமன் மற்று் 214 கிராம் எடை கொடுக்கிறது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. 25W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. வை-பை 7, ப்ளூடூத் 6.0 கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications