Home
Mobile

ஒட்டு மொத்த சாம்ராஜ்யமே இந்த Samsung போனுக்கு வெயிட்டிங்.. 60W சார்ஜிங்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒட்டு மொத்த சாம்ராஜ்யமே இந்த Samsung போனுக்கு வெயிட்டிங்..எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S26 Ultra Specifications): இதுவரை 5000எம்ஏஎச் பேட்டரி உடன் தான் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி, 5200எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த போனை 35 நிமிடங்களில் 75 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த சாம்சங் போனில் உள்ளது.

குறிப்பாக 200எம்பி சோனி மெயின் கேமரா (1/1.1-inch lens) + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவுடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் மேம்பட்ட பல கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

அதேபோல் 6.9-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் இருக்கும். மேலும் ஐபி69 ரேட்டிங் உடன் இந்த போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1.59,999 விலையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Image credit: Future, tomsguide

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 Ultra to launch with 60W fast charging: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X