iPhone-களுக்கு டாட்டா.. Samsung Galaxy S26 Ultra அறிமுகம்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
சாம்சங் நிறுவனத்தின் 2026 டாப் எண்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) மாடல் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சாம்சங் கேலக்சி எஸ்26 சீரீஸின் கீழ் கேலக்சி எஸ்26 மற்றும் கேலக்சி எஸ்26 பிளஸ் மாடல்களுடன் சேர்த்து அறிமுகமாகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ராவின் விரிவான அம்சங்கள்: மிகவும் முக்கியமான மற்றும் புதிய அம்சத்தை பொறுத்தவரை, இது பில்ட்-இன் ப்ரைவஸி டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பக்கவாட்டு கோணங்களில் இருந்து தெரிவுநிலையை கட்டுப்படுத்தும் அதே வேளையில், கன்டென்ட் ஆனது பிரகாசமாகவும் தெளிவாகவும் வைத்திருக்கும் ஹார்ட்வேர்-லெவல் அம்சமாகும்.

"பாரம்பரிய" ஸ்டிக்-ஆன் ப்ரைவஸி படங்களை போலல்லாமல், இந்த சொல்யூஷன் நேரடியாக டிஸ்பிளேவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது போர்ட்ரெயிட் மற்றும் லேண்ட்ஸ்கேப் முறைகள் இரண்டிலும் தடையின்றி செயல்படுகிறது மற்றும் பின், பேட்டர்ன், பாஸ்வேர்ட்-ஐ உள்ளிடும்போது அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்களை திறக்கும்போது தானாகவே செயல்படுத்தப்படும் படி கஸ்டமைஸும் செய்யலாம். நோட்டிபிகேஷன் பாப்-அப்களை பாதுகாப்பதற்கான பார்ஷியல் ஸ்க்ரீன் ப்ரைவஸி மற்றும் இன்னும் வலுவான பக்கவட்டு காட்சி கட்டுப்பாட்டிற்கான மேக்சிமம் ப்ரைவஸி ப்ரொடெக்ஷன் மோடும் இதில் உள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) ஆல் இயக்கப்படுகிறது, இது CPU செயல்திறனில் 19% வரை, என்பியு வில் 39% மற்றும் ஜிபியு செயல்திறனில் 24% வரை கோரப்பட்ட ஆதாயங்களை வழங்குகிறது.
மேம்படுத்தப்பட்ட தெர்மல் இன்டர்பேஸ் பிளேஸ்மென்ட் உடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வெப்பர் சேம்பர் ஆனது வெப்பத்தை மிகவும் திறமையாக கலைக்க உதவுகிறது. இது கேமிங், மல்டிடாஸ்கிங் மற்றும் நீட்டிக்கப்பட்ட வீடியோ பதிவின் போது நிலையான செயல்திறனை உறுதி செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குவாட்-ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 2எக்ஸ் ஆப்டிகல் தர ஜூம் கொண்ட 200எம்பி வைட் ஆங்கிள் கேமரா, 50எம்பி அல்ட்ரா-வைட், 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ (10எக்ஸ் ஆப்டிகல் தர ஜூம்) மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10எம்பி டெலிஃபோட்டோ ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 12எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட நைட்டோகிராஃபி வீடியோ மற்றும் ஹாரிசாண்டல் லாக் ஆப்ஷனுடன் மேம்படுத்தப்பட்ட சூப்பர் ஸ்டெடி மோட் போன்ற புதிய சேர்த்தல்கள் - லோ லைட் அல்லது ஹை-மோஷன் சூழ்நிலைகளில் கூட தெளிவான, நிலையான காட்சிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை இது 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் வயர்டு சார்ஜிங் 60W ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இணக்கமான அடாப்டரை பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் 75% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது. கூடவே இது வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேரையும் ஆதரிக்கிறது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது 5G, 4G LTE, Wi-Fi 7, Wi-Fi Direct மற்றும் Bluetooth 6.0 ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.1,39,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.1,59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,
ஹைஎண்ட் 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கான ப்ரீ-ஆர்டர் இன்று (பிப்ரவரி 25) முதல் தொடங்கியது. இந்த போன் கோபால்ட் வயலட், ஒயிட், பிளாக் மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய நான்கு கலர்களில் கிடைக்கும். சாம்சங்.காம் (Samsung.com) வழியாக பிங்க் கோல்ட் மற்றும் சில்வர் ஷேடோ கலர்களிலும் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications