Home
Mobile

வாடா செல்லம்.. உனக்கு தான் வெயிட்டிங்.. 200எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. 16ஜிபி மெமரி.. எந்த மாடல்?

மோட்டோரோலா, விவோ, ஒப்போ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சாம்சங் (Samsung). குறிப்பாக இந்நிறுவனம் தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) போனின் முக்கிய தகவல்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். அதாவது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதாலது சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் 2025 ஜனவரி 22-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. எனவே கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மாடல் வரும் 2026 ஜனவரி மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

வாடா செல்லம்.. உனக்கு தான் வெயிட்டிங்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S26 Ultra specifications): 200எம்பி சோனி மெயின கேமரா (1/1.1-inch lens) + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றம் மேம்பட்ட பல கேமரா அம்சங்கள் இந்த ஸ்மர்ரட்போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

6.9-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 (Qualcomm's upcoming Snapdragon 8 Gen 4) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் இருக்கும். மேலும் ஐபி69 ரேட்டிங் உடன் இந்த போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரி உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆன்லைனில் வெளியான தகலின்படி, ரூ.1,59,990 விலையில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 Ultra launch timeline tipped: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X