Home
Mobile

இந்தியாவே இந்த Samsung போனுக்கு தான் வெயிட்டிங்.. 200எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26, சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை வரும் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யும் என ஆன்லைன் தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் இந்த போன்கள் பிப்ரவரி 25 அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் ஸ்மர்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்கள். மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் வெளிவந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவே இந்த Samsung போனுக்கு தான் வெயிட்டிங்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy S26 Ultra 5G specifications): 6.9-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

200எம்பி சோனி மெயின கேமரா (1/1.1-inch lens) + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவுடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் மேம்பட்ட பல கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் இருக்கும். மேலும் ஐபி69 ரேட்டிங் உடன் இந்த போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளன. இதுதவிர பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1.59,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Source

photo credits: croma

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 Ultra Launch Date Leaked Online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X