Home
Mobile

வொர்த்து வர்மா.. ஊரே வெயிட் பண்ணும் இந்த Samsung போனில் Snapdragon 8 Elite Gen 2 சிப்செட், Android 16 ஓஎஸ்!

சாம்சங் நிறுவனத்தின் "இந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்" பற்றி எப்போதெல்லாம் புதுப்புது அப்டேட் கிடைக்கிறதோ.. அப்போதெலாம் "வொர்த்து வர்மா.. வெயிட் பண்ணி வாங்கலாம்!" என்கிற மைண்ட் வாய்ஸ்கள் எகிறும். இம்முறையும் அப்படிதான்! என்ன மாடல்? அப்படி என்னென்ன அம்சங்கள்? எப்போது அறிமுகம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

நாம் இங்கே பேசுவது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26Ultra) ஸ்மார்ட்போனை பற்றித்தான். 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பற்றி ஏற்கனவே பல லீக் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனை சிப்செட் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

ஊரே வெயிட் பண்ணும் Samsung போனில் Snapdragon 8 Elite Gen 2 சிப்செட்!

சாம்மொபைலின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 (Snapdragon 8 Elite Gen 2) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 8.5 (One UI 8.5) ஓஎஸ் உடன் அனுப்பப்படலாம்.

குவால்காம் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் அதன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்26 சீரீஸில் உள்ள மற்ற 2 மாடல்களிலும், சாம்சங் நிறுவனம் அதன் சொந்த எக்சினோஸ் 2600 (Exynos 2600) சிப்செட்டை பொருத்துமா அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 சிப்செட்டை தேர்வுசெய்யுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

அறியாதோர்களுக்கு சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் மாடல்களுடன் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனமானது அடுத்த ஆண்டு முதல், அதன் எஸ் சீரீஸின் கீழ் ஸ்டாண்டர்ட் மற்றும் பிளஸ் வேரியண்ட்களை அறிமுகம் செய்வதை நிறுத்தும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா வேரியண்ட் ஆனது 16 ஜிபி ரேம், 5500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங் ஆகிய அம்சங்களுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 6.9-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கேமராக்களை பொறுத்தவரை முன்னதாக கிடைத்த லீக்ஸ் தகவல்களின்படி, கேலக்ஸி எஸ்26 அல்ட்ராவில் 200 மெகாபிக்சல் ஐசோசெல் எச்பி2 கேமரா சென்சார் இடம்பெறலாம். இதன் கேமரா செட்டப்பில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் சென்சாறும் இடம்பெறலாம். இது நெக்ஸ்ட் ஜெனரேஷன் ப்ரோவிஷுவல் எஞ்சினுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 (Corning Gorilla Armor 2) பாதுகாப்பு, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசல்யூஷன் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.9 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ-எட்ஜ் டைனாமிக் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core 3nm Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட்டை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை 200 எம்பி வைடு-ஆங்கிள் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட குவாட் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக இது ஐபி68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 Ultra Chipset OS Details Leaked Snapdragon 8 Elite Gen 2 Android 16 One UI 8 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X