Home
Mobile

பேட்டரி முக்கியம் பிகிலு.. அவசரப்பட்டு Galaxy S25 போன்களை வாங்கிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. ஏன்னா?

6000mAh பேட்டரி என்று வந்துவிட்டால் "நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார் டா" என்பது சாம்சங் நிறுவனத்தின் ஆட்டிட்யூட் (Attitude) ஆக இருக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் சமீப காலமாகத்தான் தத்தம் ஸ்மார்ட்போன்களில் 6000mAh பேட்டரி அல்லது 6000mAh க்கு அருகிலான கெப்பாசிட்டி கொண்ட பேட்டரிகளை பேக் செய்ய தொடங்கியுள்ளன.

ஆனால் இதற்கெல்லாம் விதை போட்டது - சாம்சங் நிறுவனம் தான். சந்தேகம் இருந்தால் பெஸ்ட் 6000mAh பேட்டரி போன் என்கிற தேடலில் நீங்கள் காணும் எந்தவொரு பட்டியலில் சாம்சங் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் கூட சாம்சங் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் சீரீஸில் பெரிய பேட்டரிகளை பேக் செய்வதில்லை.

அவசரப்பட்டு Galaxy S25 போன்களை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

உதாரணத்திற்கு சமீபத்தில் அறிமுகமான கேலக்ஸி எஸ்25 சீரீஸை (Galaxy S25 Series) கூறலாம். இதன் கீழ் அறிமுகமான கேலக்ஸி எஸ்25 மாடல் 4000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடல் 4900mAh பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடல் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது

ஒருவேளை உங்களுக்கு பேட்டரி கெப்பாசிட்டி மிகவும் முக்கியம் என்றால்.. கேலக்ஸி எஸ்25 சீரீஸ் மாடல்களை வாங்காமல் கேலக்ஸி எஸ்26 சீரிஸ்க்காக காத்திருக்கலாம். ஏனென்றால் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேட்டரி கெபாசிட்டி குறித்து லீக் ஆன விவரங்கள்.. சாம்சங்கின் பிளாக்ஷிப் சீரீஸில் "சற்றே பெரிய பேட்டரிகள்" நுழைவதை குறிக்கின்றன.

டிப்ஸ்டர் பாண்டாபிளாஷ் (@PandaFlashPro) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ராவில் 5396 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி இருக்கும். அதாவது இது 5500mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படலாம். ஆக மீதமுள்ள எஸ்26 மற்றும் எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி கெப்பாசிட்டியிலும் பம்ப்-ஐ எதிர்பார்க்கலாம்!

ஆனால் டிப்ஸ்டர் பாண்டாபிளாஷ் இதையே மிகவும் குறைவான பேட்டரி என்று கூறுகிறார். அல்ட்ரா வேரியண்ட் உட்பட சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸில் உள்ள அனைத்து மாடல்களுமே லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு பதிலாக சிலிக்கான்-கார்பன் பேட்டரிகளை பயன்படுத்தக்கூடும் என்கிற தகவல் ஒன்றும் முன்னதாக வெளியானது. ஆனால் அதைப்பற்றி டிப்ஸ்டர் எதுவும் குறிப்பிடவில்லை.

இதேபோன்ற மற்றொரு அறிக்கையானது, சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் வழியாக அதன் எக்ஸினோஸ் சிப்களை மீண்டும் கொண்டு வர உள்ளதையும் வெளிப்படுத்தி உள்ளது. திபெல் (TheBell) வழியாக எங்களுக்கு கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அதன் எக்ஸினோஸ் சிப்பிகளை மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இவைகள் அடுத்த 2026 ஆம் ஆண்டு அறிமுகமாகும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் இந்த சிப்செட் எக்ஸினோஸ் 2600 (Exynos 2600) ஆக இருக்கலாம். சாம்சங் நிறுவனம் இந்த சிப்செட்டை அதன் எஸ்எப்2 2என்எம் ப்ராசஸை பயன்படுத்தி உருவாக்க போகிறது, இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உற்பத்திக்காக நிலைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிப்செட் ஆனது ஸ்மார்ட்போனின் செயல்திறனை 12% ஆகவும், ஆற்றல் செயல்திறனை 25% ஆகவும் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 3என்எம் எஸ்எப்3 உடன் ஒப்பிடும்போது 5% சிறியதாகவும் இருக்கும். எல்லாம் சரியாக நடந்தால் இப்பொது விற்பனையாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸை விட சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஆனது வேற லெவல் பெர்பார்மென்ஸை வழங்கும்.

கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது அண்டர் டிஸ்பிளே செல்பீ கேமராவை பேக் செய்யலாம். இதன் ரியர் கேமரா செட்டப்பில் பொறுத்தவரை 1/1.5-இன்ச் சென்சார் கொண்ட 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். சமீபத்தில் வெளியான எஸ்25 அல்ட்ரா மாடலில் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராக்கள் உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 Ultra Battery Capacity Bigger than S25 Ultra But Less Than 6000mAh Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X