Home
Mobile

Flagship மார்க்கெட்ட பாக்கெட்ல போட்ட Samsung.. 6 கலர்களில் புது போன்.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் அடுத்தடுத்த ஸ்மார்ட்போன்கள் குறித்து அடுக்கடுக்கான தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. 2026 இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களின் முழு அம்சங்களும் லீக் ஆன வேகத்தில், கேலக்ஸி இஸட் போல்ட் 8 மாடலின் டூயல் கிளாஸ் டிஸ்பிளே குறித்த விவரங்கள் லீக் ஆகி இருந்தன.

அந்த வரிசையில் இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஸ்மார்ட்போனும் இணைந்துள்ளது. கேலக்ஸி எஸ்26 சீரீஸின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன இது மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் கிடைத்து உள்ளது.

Samsung.. 6 கலர்களில் புது போன்.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?

எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் இவான் பிளாஸ் பகிர்ந்துள்ள விவரங்களின் படி, சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது பிளாக், ஒயிட், சில்வர் ஷேடோ, ஸ்கை ப்ளூ, கோபால்ட் வயலட் மற்றும் பிங்க் கோல்ட் என்கிற 6 கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம். சாம்சங் நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தும் முக்கிய ஷேட்கள் - பிளாக் மற்றும் ஒயிட் தான் என்றாலும், மற்ற வண்ணங்கள் புதியதாக இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒப்பிடுகையில், சாம்சங்கின் தற்போதைய பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடல் ஆனது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் கிரே, டைட்டானியம் சில்வர்ப்ளூ மற்றும் டைட்டானியம் வைட்சில்வர் கலர்களில் வாங்க கிடைக்கிறது. இதோடு சாம்சங்கின் வலைத்தளத்திலிருந்து டைட்டானியம் ஜேட்கிரீன், டைட்டானியம் ஜெட்பிளாக் மற்றும் டைட்டானியம் பிங்க்கோல்டு ஆகிய கலர்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

எப்போது அறிமுகம்? சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 சீரீஸை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இது பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வழக்கமான ஜனவரி வெளியீட்டு காலக்கெடுவை விட ஒரு மாதம் கழித்து அறிமுகம் செய்யப்படலாம் என்றும், 2026 மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? எக்ஸ் தளம் வழியாக, நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் கேஜெட்ஸ் டேட்டா (Gadgetsdata) வழியாக கிடைத்த தகவலின்படி - கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் ஆனது LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய 6.3-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் மற்றும் HDR10+ ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவு உடனான பெரிய 6.7-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 2கே ரெசல்யூஷன் உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனையும் பெறலாம். மேலும் இந்த இரண்டு மாடல்களும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை தக்கவைத்து கொள்ளலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங்கின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது எக்ஸினோஸ் 2600 அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஆல் இயக்கப்படும் என்று டிப்ஸ்டர் நம்புகிறார். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனம் ஆனது ஸ்னாப்டிராகன் மாறுபாட்டை அமெரிக்கா மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெளியிடுகிறது, அதே நேரத்தில் உலகின் பிற பகுதிகள் எக்ஸினோஸ் வெர்ஷனை வெளியிடுகிறது

கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய இரண்டுமே 50எம்பி (மெயின்) + 12எம்பி (அல்ட்ரா வைட்) + 50எம்பி (டெலிஃபோட்டோ) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை 4300mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்; கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பெரிய 4,900mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 Ultra 6 Colour Options Leaked Ahead February 2026 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X