அதிரவிடும் விலை.. 200எம்பி கேமரா.. 1டிபி மெமரி.. OLED டிஸ்பிளே.. வருகிறது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S26 Ultra 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய சாம்சங் வரும் ஜனவரி 2026-இல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy S26 Ultra 5G specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா போனில் உள்ளது.
200எம்பி சோனி மெயின கேமரா (1/1.1-inch lens) + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவுடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் மேம்பட்ட பல கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் இருக்கும். மேலும் ஐபி69 ரேட்டிங் உடன் இந்த போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரி உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1.59,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: hindustantimes


Click it and Unblock the Notifications








