சரண்டர் ஆன Samsung.. புத்தம் புது Galaxy போன்.. வரும் போதே ரூ.11,000 விலை கம்மி.. என்ன மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் கீழ் உள்ள அனைத்து மாடல்களின் விலை நிர்ணயமு ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.
மைக்ரோபிளாக்கிங் தளமான ப்ளூஸ்க்கை சோஷியல் (Bluesky Social) வழியாக டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்டின் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) மாடல் ஆனது கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலை விட (இந்திய ரூபாய் மதிப்பின்படு) தோராயமாக ரூ.11,000 விலை குறைவாக இருக்கும். இந்த விலை மாற்றம் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 256GB மற்றும் 512GB ஆப்ஷன்களுக்கு பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஐரோப்பாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,62,000 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ.1,51,000 க்கு தொடங்கலாம்.
இருப்பினும் டாப்-எண்ட் 1டிபி ஆப்ஷனின் விலை அதன் முன்னோடியை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது தோராயமாக ரூ. 2,04,000 ஆக இருக்கலாம். இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களின் விலைகள் அப்படியே இருக்கலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார்.
குறிப்பிடத்தக்க வண்ணம் ஐரோப்பாவில் கேலக்ஸி எஸ்25 மற்றும் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தோராயமாக ரூ.1,01,000 மற்றும் ரூ.1,28,000 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆக
சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களும் இதே போன்ற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? எக்ஸ் தளம் வழியாக, நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் கேஜெட்ஸ் டேட்டா (Gadgetsdata) வழியாக கிடைத்த தகவலின்படி - கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் ஆனது LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய 6.3-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் மற்றும் HDR10+ ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.
மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவு உடனான பெரிய 6.7-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 2கே ரெசல்யூஷன் உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனையும் பெறலாம். மேலும் இந்த இரண்டு மாடல்களும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை தக்கவைத்து கொள்ளலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங்கின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது எக்ஸினோஸ் 2600 அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஆல் இயக்கப்படும் என்று டிப்ஸ்டர் நம்புகிறார். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனம் ஆனது ஸ்னாப்டிராகன் மாறுபாட்டை அமெரிக்கா மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெளியிடுகிறது, அதே நேரத்தில் உலகின் பிற பகுதிகள் எக்ஸினோஸ் வெர்ஷனை வெளியிடுகிறது
கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய இரண்டுமே 50எம்பி (மெயின்) + 12எம்பி (அல்ட்ரா வைட்) + 50எம்பி (டெலிஃபோட்டோ) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை 4300mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்; கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பெரிய 4,900mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








