6.9 மிமீ, 164 கிராம்..மொத்த iPhone 17 சீரீஸ் மாடல்களுக்கும் வேட்டு.. Samsung-ன் 3 புதிய போன்கள்!
சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்கள் குறித்த சில சுவார்ஸமான விவரங்கள் வெளியாகி உள்ளன. "வழக்கம் போல" இந்த சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26, சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த 3 ஸ்மார்ட்போன்களின் சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகிவிட்ட விலையில், தற்போது கேலக்ஸி எஸ்26 சீரீஸ் தொடர் ஸ்மார்ட்போன்களின் பரிமாணங்கள் (அளவீடு மற்றும் எடை) குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளது. இந்த விவரங்கள் "சாம்சங் ஆப்பிளை வம்பிழுக்கிறது" என்பதை உறுதிப்படுத்துகின்றன.

எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (Ice Universe) பகிர்ந்துள்ள விவரங்களின்படி - கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்26 ஆகிய இரண்டுமே அவற்றின் முன்னோடிகளை விட மெல்லியதாகவும், இலகுவாகவும் இருக்கலாம். மேலும் அனைத்து 3 மாடல்களுமே ஆப்பிள் அபின் 17 சீரிஸை (Apple iPhone 17 Series) விட தடிமன் மற்றும் எடையின் அடிப்படையில் குறைவாக அளவிடப்படும்.
வெளியான விவரங்களின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 7.9மிமீ தடிமன் கொண்டதாகவும், சுமார் 214 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்கள் ஆனது முறையே 6.9மிமீ (164 கிராம்) மற்றும் 7.3மிமீ (191கிராம்) தடிமன் மற்றும் எடையை கொண்டிருக்கலாம்.
இது உண்மையாக இருந்தால், சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் ஸ்டாண்டர்ட் மாடல்கள் அவற்றின் முன்னோடிகளான கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்25 மாடலை விட இலகுவாகவும் மெல்லியதாகவும் இருக்கலாம். குறிப்பிடத்தக்க வகையில் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 8.2 மிமீ தடிமன் மற்றும் சுமார் 218 கிராம் எடையை கொண்டுள்ளது. அதே நேரத்தில் வெண்ணிலா கேலக்ஸி எஸ்25 ஆனது 7.2 மிமீ தடிமன் மற்றும் சுமார் 168 கிராம் எடையை கொண்டுள்ளது.
சுவாரஸ்யமாக, சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல் ஆனது அதன் முன்னோடியை போலவே தடிமன் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது 7.3 மிமீ தடிமன் மற்றும் சுமார் 190 கிராம் எடை கொண்ட கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலை விட கனமாக இருக்கலாம். ஆக ஒட்டுமொத்தமாக முழு சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸும் 2025 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 17 சீரிஸை விட மெல்லியதாகவும் இலகுவாகவும் இருக்கலாம்.
நினைவூட்டும் வண்ணம் ஸ்டாண்டர்ட் ஐபோன் 17 மாடல் 7.95 மிமீ தடிமன் மற்றும் சுமார் 177 கிராம் எடையை கொண்டுள்ளது. இதற்கிடையில், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டும் 8.75 மிமீ தடிமன் கொண்டவைகளாக உள்ளன, அதே நேரத்தில் முறையே 204 கிராம் மற்றும் 231 கிராம் எடையை கொண்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போன்கள் - அதன் முன்னர் அறிவிக்கப்பட்ட வெளியீட்டு தேதியான பிப்ரவரி 25, 2026 க்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்படலாம். ஆக 2026 பிப்ரவரி தொடக்கத்தில் விற்பனைக்கு வர அதிக வாய்ப்புள்ளது
சாம்சங் நிறுவனத்தின் இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் பிளாக்ஷிப் சிப்செட் ஆன ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படலாம். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில், இது இன்னுமும் அறிமுகப்படுத்தப்படாத சாம்சங்கின் எக்ஸினோஸ் 2600 சிப் உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும், சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் எஸ்26 பிளஸ் மாடல்களில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பும் , அல்ட்ரா மாடலில் குவாட் ரியர் கேமரா செட்டப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








