Samsung நீ கலக்கு சித்தப்பு.. Galaxy S26 சீரீஸ் போன்களின் மீதான இலவ ஆபர்கள் அறிவிப்பு.. பிப்.25 அறிமுகம்!
2026 ஆம் ஆண்டுக்கான சாம்சங்கின் முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் சாம்சங்கின் அடுத்த ஜெனரேஷன் கேலக்ஸி எஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அது கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஆகும்.
இதன் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26, சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ப்ரீ-ரிசர்வ் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதற்காக சில முன்பதிவு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்26 முன்பதிவு சலுகையாக - இலவச ஸ்டோரேஜ் அப்கிரேட்-ஐ அறிவித்துள்ளது. இதன் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் மாடல்களில் ஒன்றை ப்ரீ-ரிசர்வ் செய்து, பின்னர் ப்ரீ ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணம் இல்லாமல் அடுத்த ஸ்டோரேஜ் டயர்-க்கான இலவச மேம்படுத்தலுக்கு தகுதி பெறுவார்கள்.
எடுத்துக்காட்டாக, கேலக்ஸி எஸ்26 சீரீஸின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்குபவர்கள் 512ஜிபி மாடலுக்கு இலவச மேம்படுத்தலை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும் ஆவர்வமுள்ள வாடிக்கையாளர்கள் கேலக்ஸி ப்ரீ-ரிசர்வ் விஐபி பாஸை பெற ரூ. 999 செலுத்தி தங்களுக்கான ப்ரீ-ரிசர்வ் இடத்தை பெறலாம என்றும், வரவிருக்கும் கேலக்ஸி போன்களை வாங்கும் போது இ-ஸ்டோர் வவுச்சர் மூலம் ரூ.2,699 மதிப்புள்ள சலுகைகளை பெறலாம் என்றும் சாம்சங் நிறுவனம் கூறுகிறது.
இது தவிர, அவர்கள் ரூ.5,000 டெய்லி வவுச்சர் மற்றும் ரூ.50,000 மதிப்புள்ள கிராண்ட் வவுச்சருடன் டிராவில் பங்கேற்கவும் தகுதியுடையவர்கள் என்றும் சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. கடைசியாக, சாம்சங் நிறுவனம் தங்கள் பழைய போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிக பரிமாற்ற மதிப்புள்ள லாக்-இன் வசதியையும் வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் தங்கள் தற்போதைய ஸ்மார்ட்போனை டிரேட் செய்து கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் அல்லது கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா வாங்கும்போது பரிமாற்ற மதிப்பை மீட்டெடுக்கலாம். இருப்பினும், இறுதி பரிமாற்ற தொகை அவர்களின் பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் நிலையை பொறுத்து, அத்துடன் அவர்களின் இருப்பிடத்தில் இந்த சலுகையின் கிடைக்கும் தன்மையை பொறுத்து மாறுபடும்
விலைகள் நிச்சயமாக அதிகமாகவே இருக்கும்: அறிமுகத்திற்கு முன்பே கேலக்ஸி எஸ்26 சீரீஸின் கீழ் வரும் 3 ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறித்த "ஷாக்" தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தென் கொரிய வெளியீடான IT Chosun வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, மேம்பட்ட சிப் உற்பத்தியுடன் தொடர்புடைய உயரும் செலவுகளுடன் சாம்சங் நிறுவனம் போராடி வருகிறது.
எனவே ஸ்டாஅடர்ட் சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் ஆனது பல சந்தைகளில் எக்ஸினோஸ் 2600 சிப்செட் உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அதன் 2nm GAA (Gate All Around) செயல்பாட்டில் கட்டமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் முந்தைய செலவுகளுடன் ஒப்பிடும்போது வேஃபர் மற்றும் ஈல்ட் செலவுகளை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டே சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் விலையை உயர்த்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் (எம்எக்ஸ்) மற்றும் டிவைஸ் எக்ஸ்பீரியன்ஸ் (டிஎக்ஸ்) பிரிவுகளின் தலைவரும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான டி.எம். ரோவின் கடைசி நிமிட தலையீட்டால் "திட்டமிடப்பட்ட" நடவடிக்கை தடுக்கப்பட்டது.
இருப்பினும், இந்த முறை கூடுதல் உற்பத்தி செலவுகளை ஏற்றுக்கொள்வது சாம்சங் நிறுவனத்திற்கு சாத்தியமில்லை. சந்தை பங்கைப் பாதுகாக்க சாம்சங் நிலையான விலையை பராமரிக்க விரும்பினாலும், விலை உயர்வை தவிர்ப்பது கடினமாகி வருவதாக வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications