Home
Mobile

செஞ்சிவிட்டான் Samsung.. கேலக்சி S26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் Full Specs லீக்.. எப்போது அறிமுகம்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் 2026 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்காக காத்திருக்கிறீர்களா.. அதாவது கேலக்ஸி எஸ்26 சீரீஸ் மாடல்களுக்காக காத்திருக்கீர்களா? ஆம் என்றால் உங்களுக்கு ஒரு குட் நியூஸ். அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாகவே கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய 2 ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

எக்ஸ் தளம் வழியாக, நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் கேஜெட்ஸ் டேட்டா (Gadgetsdata) வழியாக கிடைத்த தகவலின்படி - கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் ஆனது LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய 6.3-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் மற்றும் HDR10+ ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

Samsung கேலக்சி S26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் அம்சங்கள் லீக்!

மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவு உடனான பெரிய 6.7-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 2கே ரெசல்யூஷன் உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனையும் பெறலாம். மேலும் இந்த இரண்டு மாடல்களும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை தக்கவைத்து கொள்ளலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங்கின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது எக்ஸினோஸ் 2600 அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஆல் இயக்கப்படும் என்று டிப்ஸ்டர் நம்புகிறார். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனம் ஆனது ஸ்னாப்டிராகன் மாறுபாட்டை அமெரிக்கா மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெளியிடுகிறது, அதே நேரத்தில் உலகின் பிற பகுதிகள் எக்ஸினோஸ் வெர்ஷனை வெளியிடுகிறது

கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய இரண்டுமே 50எம்பி (மெயின்) + 12எம்பி (அல்ட்ரா வைட்) + 50எம்பி (டெலிஃபோட்டோ) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை 4300mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்; கேலக்ஸி எஸ்26 [பிளஸ் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பெரிய 4,900mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? லீக் தகவல்களின்படி சாம்சங் நிறுவனமானது பிப்ரவரி 2026 இறுதிக்குள் உலகளவில் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம். உலகளாவிய வெளியீட்டை தொடர்ந்து, மார்ச் மாத தொடக்கத்தில் இந்த போன்கள் இந்தியாவிற்கு வரும். சாம்சங் இன்னுமும் எந்த தேதியையும் உறுதிப்படுத்தவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மாடல் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம்: சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஆனது எக்கச்சக்கமான லீக்ஸ் மற்றும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமானது. ஆனால் வேலைக்கு ஆகவில்லை. போதாக்குறைக்கு 2025 ஆம் ஆண்டு முழுவதுமே அல்ட்ராஸ்லிம் ஸ்மார்ட்போன்களுக்கான "சந்தை ஆர்வம்" குறைவாகவும் இருந்தது.

இதன் விளைவாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே, சாம்சங் நிறுவனம்தான் அடுத்த அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் திட்டத்திலிருந்து விலகுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 எட்ஜ்ஸ்மார்ட்போனின் தயாரிப்புக்கான திட்டங்களை ரத்து செய்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

அல்ட்ரா ஸ்லிம் டிசைன்கள் ஆரம்பகால கவனத்தை ஈர்த்திருந்தாலும், சமீபத்திய விற்பனை போக்குகள் ஆனது வாடிக்கையாளர்கள் - பேட்டரி லைஃப், கேமரா நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்தபட்ச தடிமனை விட நிலையான செயல்திறனுக்கு முன்னுரிமை அளிப்பதை குறிக்கின்றன. ஆப்பிளின் அல்ட்ரா ஸ்லிம் மாடல் ஆன ஐபோன் ஏர் மாடலுக்கும் கூட 2025-ல் "செம்ம அடி" விழுந்தது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு (கொரியா எகனாமிக் டெய்லியின் சமீபத்திய அறிக்கையின்படி) சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் ஸ்மார்ட்போனின் மேம்பாட்டை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ஆக 2026 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் "சமநிலையான" வன்பொருளில் கவனம் செலுத்தி, மிகவும் பாரம்பரியமான கேலக்ஸி எஸ்26 சீரீஸ்க்கு திரும்பும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 Samsung Galaxy S26 Plus Specifications Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X