Home
Mobile

Samsung செஞ்சி விட்ருச்சு.. Galaxy S26, S26 Plus, S26 Ultra விலைகள்!

அடுத்த வாரம் நடைபெற உள்ள கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சீரிஸின் கீழ் கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அறிமுகத்திற்கு முன்னதாக, இந்த 3 ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறித்த "ஷாக்" தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தென் கொரிய வெளியீடான IT Chosun வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, மேம்பட்ட சிப் உற்பத்தியுடன் தொடர்புடைய உயரும் செலவுகளுடன் சாம்சங் நிறுவனம் போராடி வருகிறது.

Samsung செஞ்சி விட்ருச்சு.. Galaxy S26, S26 Plus, S26 Ultra விலைகள்!

எனவே ஸ்டாஅடர்ட் சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் ஆனது பல சந்தைகளில் எக்ஸினோஸ் 2600 சிப்செட் உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அதன் 2nm GAA (Gate All Around) செயல்பாட்டில் கட்டமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் முந்தைய செலவுகளுடன் ஒப்பிடும்போது வேஃபர் மற்றும் ஈல்ட் செலவுகளை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டே சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் விலையை உயர்த்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் (எம்எக்ஸ்) மற்றும் டிவைஸ் எக்ஸ்பீரியன்ஸ் (டிஎக்ஸ்) பிரிவுகளின் தலைவரும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான டி.எம். ரோவின் கடைசி நிமிட தலையீட்டால் "திட்டமிடப்பட்ட" நடவடிக்கை தடுக்கப்பட்டது.

இருப்பினும், இந்த முறை கூடுதல் உற்பத்தி செலவுகளை ஏற்றுக்கொள்வது சாம்சங் நிறுவனத்திற்கு சாத்தியமில்லை. சந்தை பங்கைப் பாதுகாக்க சாம்சங் நிலையான விலையை பராமரிக்க விரும்பினாலும், விலை உயர்வை தவிர்ப்பது கடினமாகி வருவதாக வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

ஆப்பிள் உடனான சாம்சங்கின் போட்டி ஏற்றத்தாழ்வு குறித்து டி.எம். ரோ கவலை கொண்டுள்ளதாகவும் வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது. ஆப்பிள் நிறுவனம் வருகிற 2026 செப்டம்பர் மாதத்தில் தற்போதைய ஐபோன் 17 சீரீஸை போன்ற விலையில் ஐபோன் 18 சீரீஸை அறிமுகப்படுத்தும் என்கிற தகவல் பரவலாகி வருகிறது. இதனால், கேலக்ஸி எஸ்26 சீரீஸ்-க்கான எந்தவொரு விலை அதிகரிப்பும் விலை இடைவெளியை அதிகரிக்கக்கூடும் மற்றும் அல்ட்ரா-பிரீமியம் பிரிவில் சாம்சங்கின் போட்டித்தன்மையை பாதிக்கக்கூடும்.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2026 நிகழ்வு ஆனது வருகிற பிப்ரவரி 25 அன்று இந்திய நேரப்படி இரவு 11:30 மணிக்கு கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும். சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து புதிய இயர்ப்டஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது கேலக்ஸி பட்ஸ் 4 சீரீஸ் மாடல்களாக இருக்கலாம். இதன்கீழ் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ என்கிற 2 மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய அறிக்கைகளின்படி, நிலையான கேலக்ஸி பட்ஸ் 4 விலை தோராயமாக ரூ.19,200 ஆக இருக்கலாம், அதே நேரத்தில் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ தோராயமாக ரூ.26,600 க்கு அறிமுகம் செய்யப்படலாம்

இரண்டு மாடல்களுமே பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ மூன்றாவது ஆப்ரிகாட் கலர் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படலாம். இருப்பினும், இது சாம்சங் ஆன்லைன் ஸ்டோருக்கு பிரத்தியேகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 S26 Plus S26 Ultra To See Price Hike Due to Rising Chip Costs Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X