Home
Mobile

வாவ் இது செமயா இருக்கே.. இதுதான் புதிய சாம்சங் போன்.. 50எம்பி கேமரா.. 16ஜிபி ரேம்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ (Samsung Galaxy S26 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் மாதங்களில் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கேலக்ஸி எஸ்26 ப்ரோ ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியைக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாவ் இது செமயா இருக்கே.. இதுதான் புதிய சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ அம்சங்கள் (Samsung Galaxy S26 Pro specifications): 6.3-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்ஸிநோஸ் 2600 (Exynos 2600) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதுவும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான போன்.

50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

4300mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனின் பேடடரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் போனில் உள்ளன. அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 ப்ரோ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளியாகும்.

photo credit: androidheadlines

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 Pro images and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X