பிரிச்சி விட்டாப்ல.. Samsung Galaxy S26+ அறிமுகம்.. நைட்டோபோட்டோகிராபி கேமரா.. 4900mAh பேட்டரி.. விலை என்ன?
இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் (Samsung Galaxy S26+) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. நைட்டோபோட்டோகிராபி, அரிசோன்டல் லாக் போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்களுடன் வெளியாகி இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் ப்ரீ-ஆர்டர் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
கேலக்ஸி அன்பேக்டு 2026 இவென்ட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் 6.7 இன்ச் டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்பிளவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் தனியிடம் பிடித்துள்ளது.

இதில் நவ் நட்ஜ் (Now Nudge), நவ் ப்ரீப் (Now Brief) மட்டுமல்லாமல், கான்வெர்சேஷன் பிக்ஸ்பை (Conversational Bixby) கிடைக்கிறது. கிநாக்ஸ் மேட்ரிக்ஸ் புரொடெக்சன் (Knox Matrix Protection) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கிடைத்துள்ளது. சாம்சங் எக்ஸினோஸ் 2600 (Samsung Exynos 2600) கிடைக்கிறது.
குறிப்பிட்ட மார்கெட்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்கிறது. 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் (Dynamic AMOLED 2X) டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொண்டுள்ளது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி 3X டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 3X ஆப்டிகல் ஜூமிங், 2X ஆப்டிகல் குவாலிட்டி ஜூமிங் மற்றும் 30X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் கொண்டுள்ளது.
மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. அரிசோன்டல் லாக் (Horizontal Lock), நைட்டோபோட்டோகிராபி (Nightography) போன்ற பிரத்யேக பீச்சர்களை கொடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4900mAh பேட்டரி கிடைக்கிறது.

மேலும், 25W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேரிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,19,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,39,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ப்ரீ-ஆர்டர் செய்தால், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.1,19,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
ஆகவே, ரூ.20,000 அறிமுக சலுகையில் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். இன்று முதல் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. மார்ச் 6ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. கோபால்ட் வயலெட் (Cobalt Violet) மற்றும் பிளாக் (Black) கலர்களில் கிடைக்க இருக்கிறது. மேலும், பிங்க் கோல்டு (Pink Gold) மற்றும் சில்வர் ஷேடோ (Silver Shadow) ஆகிய ஸ்பெஷல் கலர்களும் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications