Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. வருகிறது புது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 plus) ஸ்மார்ட்போன் ஆனது BIS சான்றிதழ் தளத்தில் SM-S947B/DS என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் போனின விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy S26 plus specifications): 6.7-இன்ச் QHD டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புது Samsung 5ஜி போன்..

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

50எம்பி மெயின கேமரா + 10எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவுடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் மேம்பட்ட பல கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் இருக்கும். மேலும் ஐபி68 ரேட்டிங் உடன் இந்த போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4900mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. இதுதவிர பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் வெளியாகும்.

photo credits: samsung, msn

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 Plus spotted on BIS certification: May launch in India soon: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X