செஞ்சிட்டான் Samsung.. இந்த பிப்ரவரியில் அறிமுகமாகும் 3 புதிய போன்கள்.. எப்போது? என்னென்ன மாடல்கள்?
Samsung (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 (Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்களை இந்த (பிப்ரவரி) மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறியிட்டு சில வேண்டும் என்றால் இது பிப்ரவரி 25 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்சி எஸ்26 சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), கேலக்ஸி எஸ்26 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளன.

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ்-ன் சமீபத்திய அறிக்கையின்படி, கேமரா ஐலேண்ட்டை தவிர்த்து, கேலக்ஸி எஸ்26 மற்றும் எஸ்26 பிளஸ் ஆகிய இரண்டுமே முன்னதாக வெளியான கேலக்ஸி எஸ்25, எஸ்25 பிளஸ் மாடல்களை போன்ற வடிவமைப்பையே கொண்டிருக்கும். கேலக்ஸி எஸ்25 சீரீஸின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் ஆனது சமமாக இருந்தாலும், கூறப்படும் கேலக்ஸி எஸ்26 சீரீஸில் சற்றே உயர்த்தப்பட்ட கேமரா டிசைன் இருக்கலாம். அதாவது கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலில் உள்ளதை போல!
கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 மாடல் ஆனது 6.3-இன்ச் FHD+ டைனமிக் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். அளவீட்டில் இது 149.6 x 71.7 x 7.2 மிமீ அளவிடும் மற்றும் 137 கிராம் எடை கொண்டதாக இருக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, இது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம். முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு சாம்சங் மீண்டும் அதன் டூயல்-சிப் உத்தியைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கேலக்ஸி எஸ்26 மாடல் ஆனது எக்ஸினோஸ் 2600 சிப்செட் கொண்டு இயக்கப்படலாம், அதே நேரத்தில் மற்ற பிராந்தியங்களில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டை பெறலாம். இது ஆண்ட்ராய்டு 16-அடிப்படையிலான ஒன் யுஐ 8.5 உடன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை 4,300mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.
கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல் ஆனது 6.7-இன்ச் HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். அளவீட்டில் இது 158.4 x 75.8 x 7.3 மிமீ அளவிடும் மற்றும் 190 கிராம் எடை கொண்டதாக இருக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, இதுவும் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம். முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
சிப்செட்டிலும் ஒற்றுமை இருக்கும். எஸ்26 மாடலை போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கேலக்ஸி எஸ்26 ப்ளஸ் மாடல் ஆனது எக்ஸினோஸ் 2600 சிப்செட் கொண்டு இயக்கப்படலாம், அதே நேரத்தில் மற்ற பிராந்தியங்களில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டை பெறலாம். இது ஆண்ட்ராய்டு 16-அடிப்படையிலான ஒன் யுஐ 8.5 உடன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் சற்றே பெரிய 4,900mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








