அவசரப்பட்டு வேற 5ஜி போன் வாங்கிடாதீங்க.. ஒரே நாளில் 3 புதிய Samsung போன்கள் அறிமுகம்.. எப்போது, என்ன மாடல்?
2026 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி லீக் ஆகியுள்ளது. அது கேலக்ஸி எஸ்26 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இது கடந்த ஜனவரி 2025 இல் வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தபடியாக வரும் மாடல்களாகும்.
இந்த சீரீஸின் கீழ் வெண்ணிலா சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஆகிய 3 மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி குறித்து ஆன்லைனில் பல ஊகங்கள் உள்ளன. கடந்த காலங்களில், ஒரு சில அறிக்கைகள், இது ஜனவரி பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று பரிந்துரைத்தன, மற்றவை பிப்ரவரி பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று கூறின. இப்போது, ஒரு டிப்ஸ்டர் இந்த 3 ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை லீக் செய்துள்ளளார்.
எக்ஸ் (X) தளத்தில் டிப்ஸ்டர் இவான் பிளாஸ் (Evan Blass - @evleaks) பதிவிட்டுள்ள விவரங்களின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் ஆனது 2026 பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும். இது கடந்த நவம்பர் 2025 இல் வெளியான ஒரு லீக் உடன் ஒத்துப்போகிறது. அப்போது வெளியான ஒரு அறிக்கையும் கூட இதே வெளியீட்டு தேதியை பரிந்துரைத்து இருந்தது.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் மாடலுக்கு கும்பிடு: 2026 இல் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம். சில வாரங்களுக்கு முன் வெளியான ஒரு தகவல் - சாம்சங் நிறுவனம் அதன் அடுத்த அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் திட்டத்திலிருந்து விலகுவதாக கூறுகிறது
அதாவது சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 எட்ஜ்ஸ்மார்ட்போனின் தயாரிப்புக்கான திட்டங்களை ரத்து செய்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் டிசைன்கள் ஆரம்பகால கவனத்தை ஈர்த்திருந்தாலும், சமீபத்திய விற்பனை போக்குகள் ஆனது வாடிக்கையாளர்கள் - பேட்டரி லைஃப், கேமரா நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்தபட்ச தடிமனை விட நிலையான செயல்திறனுக்கு முன்னுரிமை அளிப்பதை குறிக்கின்றன
இதையெல்லாம் கருத்தில் கொண்டு (கொரியா எகனாமிக் டெய்லியின் சமீபத்திய அறிக்கையின்படி) சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் ஸ்மார்ட்போனின் மேம்பாட்டை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ஆக 2026 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் "சமநிலையான" வன்பொருளில் கவனம் செலுத்தி, மிகவும் பாரம்பரியமான கேலக்ஸி எஸ்26 சீரீஸ்க்கு திரும்பும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் இந்திய விலை விவரங்கள்: சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.80,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.99,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ்-ன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.99,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.1,11,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,29,999 க்கும், 12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ. 1,41,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ. 1,65,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








