குட்டி குட்டி பேட்டரிகளுடன் 3 புது Samsung போன்கள்.. OnePlus 15, iQOO 15, Realme GT 8 Pro எல்லாம் ஓரம்போ!
ஒன்பிளஸ், ஒப்போ, ரியல்மி மற்றும் ஐக்யூ ஆகிய 4 நிறுவனங்களும் முறையே ஒன்பிளஸ் 15, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ, ரியல்மி ஜிடி 8 ப்ரோ மற்றும் ஐக்யூ 15 ஆகிய ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை கையில் வைத்துக்கொண்டு "ஆட்டமாக" ஆடிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலைப்பாட்டில் ஸ்மார்ட்போன் சந்தையின் "ஒரிஜினல் கேங்ஸ்டர்" ஆன சாம்சங் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் எப்போது அறிமுகமாகும் என்கிற விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த சீரிஸின் கீழ் கேலக்ஸி எஸ்26 (Galaxy S26), கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Galaxy S26 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Galaxy S26 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 3 சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தையும் உள்ளடக்கிய சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு (Galaxy Unpacked Event) ஆனது - ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட சற்று தாமதமாக, அதாவது 2026 பிப்ரவரி மாத இறுதியில் நடத்தலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.
தென் கொரிய வெளியீடான மண்டே டூடே (Monday Today) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஆனது பிப்ரவரி 25, 2026 அன்று சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும். இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனம் ஆனது புதிய ஏஐ அம்சங்களை அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இது உண்மையாக இருந்தால், 2023 ஆம் ஆண்டிற்கு பிறகு சான் பிரான்சிஸ்கோவில் நடக்கும் சாம்சங்கின் முதல் நிகழ்வாக இது இருக்கும். வழக்கமாக சாம்சங் அதன் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யும்.
ஆனால் இம்முறை சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடலுக்கு பதிலாக ஸ்டாண்டர்ட் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 எட்ஜுக்கு பதிலாக கேலக்ஸி எஸ்26 ப்ரோ ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதுவே தாமதத்திற்கு காரணமாக இருக்கும் என்றும் யூகங்கள் கிளம்பியுள்ளன
சாம்சங் கேலக்சி எஸ்26 சீரிஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Samsung Galaxy S26 Series Expected Specifications)? 3 கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 2600 சிப்பால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பிராந்தியங்களில், இது குவால்காமின் 3என்எம் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் வரலாம்
அல்ட்ரா மாடலில் 6.9-இன்ச் குவாட் எச்டி எம்14 ஓஎல்இடி டிஸ்பிளே, 5400mAh பேட்டரி, மேம்படுத்தப்பட்ட 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராவைடு கேமரா, 5X ஆப்டிகல் ஜூம் திறன்களுடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் இறுதியாக, 12-மெகாபிக்சல் 1/2.55-இன்ச் 3x கேமரா அல்லது 50-மெகாபிக்சல் 3x கேமராவுடன் குவாட் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம்.
மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகியவைகள் முறையே 6.3-இன்ச் மற்றும் 6.7-இன்ச் குவாட் எச்டி எம்14 ஓஎல்இடி டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 50-மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 12-மெகாபிக்சல் 3X டெலிஃபோட்டோ கேமராவுடன் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்களை வழங்கலாம். பேட்டரியை பொறுத்தவரை முறையே 4,300mAh மற்றும் 4,900mAh பேட்டரிகளை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








