Samsung Galaxy S26 சீரீஸ் இந்திய விலை VS துபாய் விலை.. எவ்வளவு வித்தியாசம்?
இந்த 2026 ஆம் ஆண்டில் சாம்சங் (Samsung) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்கள் - கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் போது, இந்தியாவிலும் பிற உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Galaxy S26 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Galaxy S26 Ultra) ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியா உட்பட பல நாடுகளில் ஏற்கனவே இந்த 3 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகளும் தொடங்கி விட்டன.

ஒருவேளை நீங்கள் இந்திய விலைகளோடு மற்ற நாடுகளில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன விலைகளை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால்.. அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் இதோ:
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் விலை - ரூ.87,999 முதல் தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை - ரூ.1,19,999 முதல் தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,39,999 முதல் தொடங்குகிறது
அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் விலை - $899 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.82,000) முதல் தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை - $1099 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,00,000) முதல் தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை - $1299 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,18,000) முதல் தொடங்குகிறது
இங்கிலாந்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் விலை - GBP 879 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,08,240) முதல் தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை - GBP 1,099 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,35,330) முதல் தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை - GBP 1,279 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,57,496) முதல் தொடங்குகிறது
துபாயில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் (512ஜிபி) விலை - AED 3,599 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.89,029) முதல் தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனின் (512ஜிபி) விலை - AED 4,299 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,06,345) முதல் தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் (512ஜிபி) விலை - AED 5,099 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,26,135) முதல் தொடங்குகிறது
ஜெர்மனியில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் (512ஜிபி) விலை - EUR 999 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,55,524) முதல் தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனின் (512ஜிபி) விலை - EUR 1,249 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,34,058) முதல் தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் (512ஜிபி) விலை - EUR 1,449 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,57,496) முதல் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications








