ஆரம்பமே ரூ.87,999 பட்ஜெட்.. Samsung Galaxy S26 சீரிஸ் ப்ரீ-புக்கிங் பிச்சிக்குது.. இந்தியாவில் விலை எப்படி?
சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் மாடல்கள் இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டன. ரூ.20,000 அறிமுக சலுகையில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கின்றன. ரூ.87,999 முதல் விலை தொடங்குகிறது. அதிகபட்சமாக சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,89,999ஆக இருக்கிறது. இந்த விலைகள் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2026 நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்26, சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஆகிய மாடல்கள் வெளியாகின. புதிய டிரான்ஸ்லுசென்ட் கேமரா ஐலேண்ட் டிசைன், கஸ்டமைஸ்டு ப்ராசஸர், நேச்சுரல் லேங்குவேஜ் போன்ற பல்வேறு அப்கிரேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 விலை (Samsung Galaxy S26 Price): 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.87,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,07,999ஆக இருக்கிறது. பிளாக் (Black), ஒயிட் (White), ஸ்கை ப்ளூ (Sky Blue) மற்றும் கோபால்ட் வயலெட் (Cobalt Violet) கலர்களில் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்26பிளஸ் விலை (Samsung Galaxy S26+ Price): 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,19,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,39,999ஆக இருக்கிறது. கோபால்ட் வயலெட் (Coablt Violet), பிளாக் (Black), பிங்க் கோல்டு (Pink Gold) மற்றும் சில்வர் ஷோடோ (Silver Shadow) ஆகிய கலர்களில் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா விலை (Samsung Galaxy S26 Ultra Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,39,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,59,999ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,89,999ஆக இருக்கிறது.
இந்த அல்ட்ரா மாடலிலும் பிளாக் (Black), ஒயிட் (White), ஸ்கை ப்ளூ (Sky Blue) மற்றும் கோபால்ட் வயலெட் (Cobalt Violet) கலர்கள் வருகின்றன. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flpikart) மற்றும் சாம்சங் ஸ்டோர் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ப்ரீ-புக்கிங் சலுகையாக ரூ.20,000 தள்ளுபடி வருகிறது.
அதாவது, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.20,000 கம்மி விலைக்கு வாங்கி கொள்ளலாம். பிறகு மார்கெட் விலையில் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், பேங்க் டிஸ்கவுண்ட், இஎம்ஐ ஆஃபர் உள்ளிட்டவையும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் மாடல்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 சீரிஸ் விலை (Samsung Galaxy Buds4 Series Price): சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 (Samsung Galaxy Buds4) மாடலும் ரூ.22,999 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.16,999 பட்ஜெட்டில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அதேபோல சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 ப்ரோ (Samsung Galaxy Buds4 Pro) மாடலும் ரூ.29,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு, அறிமுக சலுகையில் ரூ.22,999 விலைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications