Home
Mobile

Samsung போட்டான் பாரு.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 4900mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் கஸ்டமர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நேரம் வந்துவிட்டது. இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ (Samsung Galaxy S26 FE) ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி ஓஐஎஸ் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வழக்கமான பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.74,799 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, ரூ.79,999 விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. இதனால், சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. ஏனென்றால், கேலக்ஸி எஸ்26 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்க பீச்சர்கள் எப்இ மாடலிலும் கிடைக்கும்.

Samsung போட்டான் பாரு.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 45W சார்ஜிங்!

அதே நேரத்தில் விலையும் கம்மியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படித்தான் கடந்த மாடல்கள் வெளியாகின. ஆனால், இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆக இருக்கிறது. ஆகவே, விலையில் பெரிய மாற்றம் இல்லாததால், காத்திருந்த பிரியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாமே என்று நினைத்தாலும், அறிமுக சலுகையில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் பட்டையை கிளப்பி இருக்கிறது. 12 மாதங்களுக்கு நோ-காஸ்டு ஈஎம்ஐ கிடைக்கிறது. ரூ.7,000 வரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, தள்ளுபடி விலையில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ப்ளூபெர்ரி (Blueberry), கிராபைட் (Graphite) மற்றும் பிஸ்டாசியோ (Pistachio) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. சாம்சங் ஈ-ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் இருக்கிறது. விரைவில் விற்பனை கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S26 FE Specifications): ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொண்ட டெகா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2500 3என்எம் (Deca-Core Samsung Exynos 2500 3nm) சிப்செட் கிடைக்கிறது. சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 950 ஜிபியு (Samsung Xclipse 950 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஒன் யுஐ 9 (One UI 9) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. 6.7 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளேவை கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4900mAh பேட்டரி கிடைக்கிறது. 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளது. இந்த பேட்டரியுடன் 193 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது.

மேலும், 7.4 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. கேலக்ஸி ஏஐ பீச்சர்களையும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 FE With 8GB RAM Launched in India Under Rs 80000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X