Home
Mobile

செம்ம டிமாண்ட்.. ரூ.10,650 டிஸ்கவுண்ட் ரேட்ல Samsung ஸ்மார்ட்போன்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இதைவிட என்ன வேண்டும் என்று கேட்கும்படியான தள்ளுபடி விலைக்கு லேட்டஸ்ட் மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ (Samsung Galaxy S26 FE) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மார்கெட் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களுடன் பீச்சர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,999 ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.10,650 தள்ளுபடி போக ரூ.69,349 விலைக்கு கிடைக்கிறது. இதுபோக 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

செம்ம டிமாண்ட்.. ரூ.10,650 டிஸ்கவுண்ட் ரேட்ல Samsung ஸ்மார்ட்போன்!

ஆகவே, பேங்க் டிஸ்கவுண்ட் அல்லது நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இதில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது. ப்ளூபெர்ரி (Blueberry), கிராபைட் (Graphite) மற்றும் பிஸ்டாசியோ (Pistachio) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S26 FE Specifications): ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. டெகா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2500 3என்எம் (Deca-Core Samsung Exynos 2500 3nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் ஒன் யுஐ 9 (One UI 9) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 950 ஜிபியு (Samsung Xclipse 950 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 3X ஆப்டிகல் ஜூமிங் செய்து கொள்ளலாம். மை ஃபேன்கேம் (My FanCam), அரிசான்டல் லாக்குடன் (Horizontal Lock) சூப்பர் ஸ்டெடி (Super Steady) உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன.

மேலும், பிரத்யேக நைட்டோகிராபி (Nightography) பீச்சரும் கிடைக்கிறது. போட்டோ அசிஸ்ட் (Photo Assist) கொடுக்கப்பட்டு இருக்கிறது. லேட்டஸ்ட் ஜெமினி ஓம்னி (Gemini Omni) அணுகல்கள் கிடைக்கின்றன. போட்டோ எடிட்டிங், வீடியோ எடிட்டிங் ஆகியவற்றுக்கு இந்த ஏஐ மாடலை பயன்படுத்தி கொள்ளலாம். 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது.

15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4900mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளது. வெறும் 7.4 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. மொத்தமாக 193 கிராம் எடை கொடுக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது. 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 FE With 50MP Camera Available At Rs 10650 Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X