Home
Mobile

மொத்த மார்கெட் வெயிட்டிங்.. 7.4 எம்எம் பாடியில் 4900mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ (Samsung Galaxy S26 FE) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்க இருக்கிறது. இதனால், சாம்சங் பிரியர்கள் இப்போதே வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர். இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் என்ன? விலை எப்படி? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

ஆகஸ்ட் 27ஆம் தேதியே இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி உள்ளிட்ட வேரியண்ட்கள் வெளியாகின. ரூ.66,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருந்தது. ஆனால், சில மார்கெட்களில் மட்டுமே விற்பனை தொடங்கப்பட்டது.

மொத்த மார்கெட் வெயிட்டிங்.. 7.4 எம்எம் பாடியில் 4900mAh பேட்டரி!

இந்தியாவில் கிடைக்கவில்லை. இப்போது, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, விரைவில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ரூ.70,000 பட்ஜெட்டுக்குள் ஆரம்ப விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக சலுகையில் கம்மியாகவும் கிடைக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S26 FE Specifications): 6.7 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ கொண்டுள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கபட்டு உள்ளது.

டெகா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2500 3என்எம் (Deca-Core Samsung Exynos 2500 3nm) சிப்செட் மற்றும் சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 950 ஜிபியு (Samsung Xclipse 950 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் ஒன் யுஐ 9 (One UI 9) கிடைக்கிறது. மேலும், 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது.

12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8 எம்பி டெலிபோட்டோ கேமராவை கொடுத்து இருக்கிறது. இந்த டெலிபோட்டோவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமராவுடன் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner), டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆகிய சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4900mAh பேட்டரி கிடைக்கிறது. 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியுடன் 7.4 எம்எம் தடிமன் மற்றும் 193 கிராம் எடை கொடுத்துள்ளது. ப்ளூபெர்ரி (Blueberry), கிராபைட் (Graphite) மற்றும் பிஸ்டாசியோ (Pistachio) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். விற்பனைக்கும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 FE Sale in India Soon Flipkart Amazon Microsites Go Live Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X