Home
Mobile

வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. IP68 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. புது சாம்சங் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ (Samsung Galaxy S26 FE) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஆனால் அப்போது இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை சாம்சங் நிறுவனம். தற்போது இந்த போனின் இந்திய விலை வெளியாகி உள்ளது.

அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ மாடல் ரூ.69,999 விலையிலும், இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.79,999 விலையில் வாங்க கிடைக்கும். ஆனால் இந்த போனின் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை அந்நிறுவனம் கூடிய விரைவில் இந்த போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும். இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. புது சாம்சங் 5ஜி போன் ரெடி..

சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S26 FE Specifications): சக்திவாய்ந்த 3.2ஜிகாஹெர்ட்ஸ் ஜிபியு டெகா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2500 3என்எம் பிராசஸர் (3.2GHz GPU Deca-Core Samsung Exynos 2500 3nm processor) உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் சாம்சங் Xclipse 950 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.

அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஓ-டைனாமிக் அமோலெட் ( Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340×1080 பிக்சல்ஸ், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

குறிப்பாக One UI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 7 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 7 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதுவும் OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் 3X ஆப்டிகல் ஜூம் ஆதரவும் இந்த போனில் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ போன் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளது.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) போன்ற பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. புது சாம்சங் 5ஜி போன் ரெடி..

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போன் 4900எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதுதவிர 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் வசதிகளுடன் இந்த போன் வெளியாகி உள்ளது.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கேலக்ஸி எஸ்26 எப்இ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 193 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 FE Price in India Revealed: Check How Much It Costs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X